காத்தான்குடி: “மாற்றத்திற்கான எங்கள் தெரிவு மைத்திரி” என்னும் தொனிப்பொருளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து காத்தான்குடியில் முதலாவது பிரச்சாரக் கூட்டம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்றது.
காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள PMGGயின் மக்கள் அரங்கில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் ALM.சபீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படிக் கூட்டத்தின் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக், மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
இதன்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பெருந்தொகையான ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Published by





Leave a comment