கொழும்பு: வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு எம்.பியான ஏ.எச்.எம். அஸ்வர் வெகுஜன ஊடக தகவல் மற்றும் ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவல்கள் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது நியமனக் கடிதத்தை அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு நிபந்தனைச் சட்டம் 41 (1) இன் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமனத்தை வழங்கியுள்ளார். கடந்த வாரம் தனது பாராளுமன்ற அங்கத்துவத்தை ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அஸ்வர் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment