Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘சர்வதேச மனித உரிமைகள் தினம்’

    – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் – பழுலுல்லாஹ் பர்ஹான் மார்கழி பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இவ்வாண்டின் கருப்பொருளாக ‘மனித உரிமைகள்-365’ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருடத்தில் சகல நாட்களும் மனித உரிமைகள்தான். ஒரு நாட்டில் அனைவர்களுக்கும் சமமான உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். மனித உரிமைகள் அரசாங்கங்கள் விரும்பியவாறு வழங்கும் கொடைகள் அல்ல.

  • காத்தான்குடி அப்றா பாலர் பாடசாலையின் 2014 வருடாந்த பாலர் கலை விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அப்றா பாலர் பாடசாலையின் 2014 வருடாந்த பாலர் கலை விழா 07-12-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. அப்றா பாலர் பாடசாலையின் தலைவர் வை.எல்.எம்.இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டார்.

  • பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் சன்மார்க்க ஒன்று கூடல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: மட்டக்களப்பு –பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் சன்மார்க்க ஒன்று கூடல் 06-12-2014 நேற்று சனிக்கிழமை பாலமுனை அம்மார் ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது. பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் தலைவர் அமான் தலைமையில் இடம்பெற்ற இவ் சன்மார்க்க ஒன்று கூடலில் வாய்மையுள்ள முஸ்லிம் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.டி.எம்.அஸ்ஹர் மின்ஹாஜியும்,நவீன பொருளீட்டலில் ஹலாலும் ஹராமும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எச்.எம்.அஸ்பர் பலாஹியும்,

  • “சிறுபான்மையிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களே ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் ஆணி வேர்கள்” – அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா

    கொழும்பு: இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முஸ்லிம்களுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமையப் போகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம் என்னவென்பதை அறிய, உள் நாட்டு அரசியல் நோக்கர்கள் உட்பட சர்வதேச நாடுகள் ஆழமாக அவதானித்துக் கொண்டிருக்கின்ற காலகட்டம் இதுவாகும்.

  • மங்சந்தொடுவாய் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் பாலர் கலை நிகழ்வு 2014..

    -நமது  நிருபர்- மஞ்சந்தொடுவாய் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் பாலர் கலை நிகழ்வு மஞ்சந்தொடுவாய் ஹிழுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் மதரசா மண்டபத்தினில் திட்ட மிட்டபடி நிறுவனத்தின் தலைவர் ஜனாப் முகம்மது ஹக்கீம் தலைமையில் (07.12.2014 ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது பிரதம அதிதியாக BCAS கல்வி நிறுவனத்தில் பணிப்பாளர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டார்.

  • பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்துகொள்ளவிருந்த நிகழ்வினை தடுத்து நிறுத்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினர் முயற்சி

    ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி: மஞ்சந்தொடுவாய் பிரதேச பாலர் பாடசாலை நிகழ்வொன்றில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த காரணத்தினால், அதனை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினரால் தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • மைத்திரியின் தேர்தல் ஊர்வலத்தில் பங்கேற்ற மஹிந்தவின் மோட்டார் சைக்கிள்கள்!!

    பொலன்னறுவை: அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு மஹிந்த ராஜபக்சவின் சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும் அவர்களில் பலர் எதிர்க்கட்சி பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலை குறி வைத்து அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

  • “இரானுவத்தினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று காணப்படுவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது”

    – செட்டிக்குளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா செட்டிக்குளம்: வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட 12 ஏக்கர் காணி தொடர்பில் இரானுவத்தினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று காணப்படுவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாக செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சருக் தெரிவித்துள்ளார்.

  • ஆரையம்பதி வாகன விபத்தில் மட்டக்களப்பு தாதியர் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஸ்தலத்திலேயே பலி

    – பழுலல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு–கல்முனை ஆரையம்பதி பிரதான நெடுஞ்சாலையில் 06-12-2014 நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு தாதியர் கல்லூரி இறுதியாண்டு மாணவி கோணேசலிங்கம் விஜிதா வயது 29 என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன் ஒருவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் தெரிவித்தனர்.

  • யெமனில் அமெரிக்க பத்திரிக்கையாளர், தென்னாப்பிரிக்க ஆசிரியரை சுட்டுக் கொன்ற அல் கய்தா

    – SHM ஏடென்: யெமனில் பிணையக்கைதிகளாக இருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் மற்றும் தென்னாப்பிரிக்க ஆசிரியர் ஆகியோரை அல் கய்தா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். யெமனில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்க புகைப்பட பத்திரிக்கையாளரான லூக் சோமர்ஸ் (33) என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு தலைநகர் சனாவில் இருந்து கடத்திச் சென்றனர்.

  • சேகுஇஸ்ஸதீன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவு!

    கொழும்பு: முன்னாள் தகவல் ஊடகத்துறை பிரதியமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் கடந்த வாரம் சேகு இஸ்ஸதீனை இறக்காமத்தில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். 

  • “வவுனியாவில் முஸ்லிம்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும்”: அஸ்மின் அய்யூப்

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வவுனியா: வவுனியா வாழவைத்தகுளம் முஸ்லிம்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான அஸ்மின் அய்யூப் தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 602 603 604 605 606 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar