Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டு-மாவட்ட அபிவிருத்திக்கு தடையாக இருந்து விடக் கூடாது” – ஹிஸ்புல்லாஹ்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்ந ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் அநேகமான தமிழ் முஸ்லிம் மக்கள் தோற்றுப்போன சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்து எந்தப் பலனையும் அடையாதது போன்று இந்த ஜனாதிபதி தேர்தலிலும் தோற்றுப்போகவுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு தடையாக இருந்து விடக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • காத்தான்குடியில் மஹிந்த

    காத்தான்குடி: கடந்த 2005ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, காத்தான்குடிக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மஹிந்தவுக்கு, அவரைப்போன்றே உடையணிந்து ஜனாதிபதியை உற்சாகப்படுத்திய மாணவர்களின் காட்சி இது.

  • “யுத்தத்தின் பின்னர் மஹிந்த மக்களை மறந்துவிட்டார்”

    கொழும்பு: 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வித்தியாசமானவராக மாறி போனதாகவும் அவரை பதவிக்கு கொண்டு வர பாடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய உட்பட ஏனைய கட்சிகளை அவர் மறந்து போனதாகவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கும்புக்கெட்டே நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

  • நாளை பா.உ அமீர் அலிக்கு வரவேற்பு

    – எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: கடந்த 12.12.2014 வெள்ளிக்கிழமை சபாநாயகர் முன்னிலையில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினை வரவேற்க்கும் நிகழ்வு நாளை (18)வியாழக்கிழமை ஓட்டமாவடியில் கோல காலமாக நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபையினால் இவ்வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

  • மஸ்ஜிதுல் ஹரம் யாத்திரிகர்களை வெயில் சூட்டிலிருந்து பாதுகாக்க இராட்சத குடைகள் அமைக்க திட்டம்!

    மக்கா: புதின ஆலயமான மஸ்ஜிதுல் ஹரத்தில் யாத்திரிகர்களின் நன்மை கருதி இராட்சத குடைகளை அமைக்க சவுதி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பள்ளிவாசலின் வெளிப்புற முற்றவெளிப்பகுதியில் 300 இராட்சத குடைகள் பொருத்தப்பட இருக்கின்றன. இந்த குடைகளைக் கொண்டு பள்ளிவாசல் வெளிப்புறத் தின் 275,000 சதுர மீற்றர் பகுதிக்கு நிழல் வழங்கப்படவுள்ளது. இது பகல் வேளையில் தொழுகையில் ஈடுபடும் யாத்திரிகர்களுக்கு வசதியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • உலககிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு: காணொளி இணைப்பு

    கொழும்பு: அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இடம்பெறும் உலககிண்ண 2015- கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியிடும் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு சி.ஆர். அன்ட. எப் .சி மைதானத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வு டயலொக் நிறுவன அனுசரணையில் இடம்பெற்றது.

  • “நமது மண்ணையும் மக்களையும் வளப்படுத்திய ஜனாதிபதிக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும்”: ஹிஸ்புல்லாஹ்

    காத்தான்குடி: நவீன பொன்சேகாவாகவே மைத்திரிபால சிறிசேன மாறுவார். அவரால் ஒருபோதும் இத்தேர்தலில் வெற்றிபெற முடியாது. கடந்த 2010ம் ஆண்டு நடபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 18 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை அதைவிட பல மடங்கு வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெறுவது நிச்சயம். இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • கிராண்ட்பாஸில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மஹிந்தவை வரவேற்கும் ஆதரவாளர்கள்

  • “பொதுத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் கட்சிக்கே பிரதமர் பதவி”

    வில்கமுவ: பொதுத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறும். பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்படும். அதற்கு அடுத்த படியாக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிக்கு பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்படும்.

  • இலங்கையின் தனியார் முன்னணி உயர்கல்வி நிறுவனமான BCAS Campus இன் வருடாந்த பட்டமளிப்பு விழா கொழும்பில்

      கொழும்பு:கொழும்பு BMICH மாநாட்டு மண்டபத்தில் BCAS உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக London South Bank University இன் உபதலைவர் பேராசிரியர் Rao Bhamidimarri அவர்களும்,

  • ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுடனான விஷேட சந்திப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுடனான விஷேட சந்திப்பொன்று 16-12-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

  • NFGG – UNP இன்று கொழும்பில் முக்கிய சந்திப்பு

    NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று காலை கொழும்பில் நடைபெற்றது.

←Previous Page
1 … 592 593 594 595 596 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar