-
பிரதேச கலாச்சார விழாவில் கவிஞர் இல்மி அஹமட் லெவ்வை அவர்கள் கௌரவிக்கப்பட்டார்
IAL காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார பேரவையால் பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் அவர்கள் தலைமையில் அண்மையில் நடாத்தப்பட்ட பிரதேச கலாச்சார விழா 2014ல் கவிஞர் இல்மி அஹமட் லெவ்வை அவர்கள் கவிதைத் துறைக்கான விருதும் ‘கவிக்கோன் ‘ எனும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
-
திவிநெகும பயனாளிகள் 600 பேருக்கு வீடு திருத்துவதற்கான முதற்கட்ட மானிய உதவி 2500 ரூபாய் வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: ‘செழிப்பான இல்லம் ‘எனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவிகளை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
-
தேர்தல் ஆணையாளர், ஆணைக்குழுவின் செயலமர்வில் பங்கேற்பு
ஏ.சி.ஏ. அஸீஸ்/ பழுலுல்லாஹ் பர்ஹான் பொலநறுவை: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுக்கான தேர்தல் நடைமுறைகள் பற்றிய செயலமர்வு பொலநறுவை மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழுவின் தவிசாளர். நீதிபதி பிரியந்த ஆர்.பி. பெரேரா அவர்களின் தலைமையில் 15.12.2014 இன்று நடைபெற்றது.
-
புதிய காத்தான்குடி தெற்கு ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் 2014 கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி தெற்கு ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் 2014 கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 15-12-2014 இன்று திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் துரித முயற்சியால் பட்டதாரிகளுக்கு புலமைப்பரிசில்
– ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் துரித முயற்சியினால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கல்விபயிலும் பட்டதாரி மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
-
மட்டு-மாவட்டத்தில்-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரப் பணிகள் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் முன்னணியின் பங்காளி கட்சிகளால் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
-
ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்!- மைத்திரி
கொழும்பு: ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. இதன் காரணமாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது.
-
சிட்னியில் ஆயுததாரி ஒருவரால் பலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைப்பு
சிட்னி: அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிண்ட் கஃபே உணவகத்தில் ஆயுததாரி ஒருவரால் பலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர். மார்டின் ப்ளேஸ் என்ற அந்தப் பகுதி முழுவதையும் நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் சுற்றிவளைத்து யாரும் நுழையாதபடி, மூடியுள்ளனர். மார்டின் ப்ளேஸ் ரயில் நிலையமும் மூடப்பட்டுள்ளது.
-
‘மாற்றத்திற்கான நமது தெரிவு மைத்திரி’ மக்கள் சந்திப்பு அக்குரணையில் நடைபெற்றது
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி / பழுலுல்லாஹ் பர்ஹான் அக்குரணை: ‘மாற்றத்திற்கான நமது தெரிவு மைத்திரி’ எனும் கருப்பொருளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு அக்குரணை நகரில் இடம்பெற்றது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் அக்குரணை அரபா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், கண்டி பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம்…
-
பிஸ்மி கிண்டர் காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரில் மிக சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி கிண்டர் காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 14-12-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லடி கிரீன் காடன் ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது. பிஸ்மி கிண்டர் காடன் மற்றும் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலைகளின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் என்.எம்.முஜீப் (நளீமி) கலந்து கொண்டார்.
-
எதிர்வரும் 19 திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடி விஜயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: எதிர்வரும் 19-12-2014 வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.