கொழும்பு:கொழும்பு BMICH மாநாட்டு மண்டபத்தில் BCAS உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக London South Bank University இன் உபதலைவர் பேராசிரியர் Rao Bhamidimarri அவர்களும்,
கௌரவ அதிதிகளாக Pearson, UK நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநி திரு.Sooriya Bibile அவர்களும் இலங்கைக்கான பிரித்தானிய துர்துவராலயத்தின் வர்த்தக முதலீட்டுப் பிரிவுத் தலைவர் திரு. Garry Leslie அவர்களும் கலந்து கொண்டதோடு மற்றும் பல உயர் கல்வியியலாளர்களும் விசேட அதிதிகளாக இங்கு கலந்து கொண்டனர்.
இப்பட்டமளிப்பு விழாவில் Quantity Surveying, Civil Engineering, Telecommunication Engineering, Computing, Business Management மற்றும் LAW ஆகிய துறைகளில் இளமானிப் பட்டங்களையும் மற்றும் உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களையும் பூர்த்தி செய்த சுமார் 500 இற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களும் பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், கட்டட நிர்மாணத் துறை மற்றும் ஏனைய துறைகளில் தொழில்சார் பயிற்சி நெறிகளையும் Diploma பட்டங்களையும் உயர் தேர்ச்சியுடன் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.
BCAS Campus இல் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பிலிப்பைன்ஸ், ஜோர்தான், கத்தார், மாலைதீவு மற்றும் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இப்பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டம் பெற்றமை விசேட அம்சமாகும்.
Published by




Leave a comment