மஸ்ஜிதுல் ஹரம் யாத்திரிகர்களை வெயில் சூட்டிலிருந்து பாதுகாக்க இராட்சத குடைகள் அமைக்க திட்டம்!
மக்கா: புதின ஆலயமான மஸ்ஜிதுல் ஹரத்தில் யாத்திரிகர்களின் நன்மை கருதி இராட்சத குடைகளை அமைக்க சவுதி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பள்ளிவாசலின் வெளிப்புற முற்றவெளிப்பகுதியில் 300 இராட்சத குடைகள் பொருத்தப்பட இருக்கின்றன. இந்த குடைகளைக் கொண்டு பள்ளிவாசல் வெளிப்புறத் தின் 275,000 சதுர மீற்றர் பகுதிக்கு நிழல் வழங்கப்படவுள்ளது. இது பகல் வேளையில் தொழுகையில் ஈடுபடும் யாத்திரிகர்களுக்கு வசதியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சவுதி மன்னர் அப்துல்லாஹ் அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதேபோன்ற இராட்சத குடைகள் புனித மதீனா பள்ளி வாசலில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. இந்த குடைகள் கோடை காலத்தில் பகல் வேளைகளில் மலர் போன்று விரிந்து இரவு வேளையில் மூடிக்கொள்ளும். இவ்வாறு விரிந்து மூடிக்கொள்ளும் செயல் முறைக்கு வெறும் மூன்று நிமிடங்களே எடுத்துக் கொள்கின்றன.
இந்த குடைகளின் கூரைப்பகுதி சூடான வேளைகளில் யாத்திரிகர்களுக்கு குளிரை ஏற்படுத்தவும் குளிர் கால இரவுகளில் வேறாக வெப்பத்தை உணரச் செய்யும் வகையிலும் தயாரிக்கப்படவுள்ளன.
Leave a comment