ஓட்டமாவடி: கடந்த 12.12.2014 வெள்ளிக்கிழமை சபாநாயகர் முன்னிலையில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினை வரவேற்க்கும் நிகழ்வு நாளை (18)வியாழக்கிழமை ஓட்டமாவடியில் கோல காலமாக நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபையினால் இவ்வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வின் வரவேற்புரையினை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் ஆற்றவுள்ளதுடன் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இந்நிகழ்வில் கல்குடா வாழ் அனைத்து பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழு அழைக்கின்றனர்.
Published by

Leave a comment