-
பாகிஸ்தான் பள்ளிக் கூடத்தில் படுகொலை 132 பேர் பலி
பெஷவார்: பாகிஸ்தானின் வடமேற்கே பெஷவர் நகரில் தாலிபான் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 84 பள்ளிக் குழந்தைகள் உட்பட 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பெஷாவர் பகுதியில் இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றைக் கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலாவர்கள் சிறார்கள் என கைபர் பக்தூன்க்வாமாகாண முதல்வர் கூறினார்.
-
காத்தான்குடிக்கு மஹிந்த வருகை: வீடுகளில் விசாரணை!
– நமது நிருபர் காத்தான்குடி: எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காத்தான்குடிக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
-
“மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோகத்தர்களுக்கு இதுவரையிலும் தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை”
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோகத்தர்களுக்கு இதுவரையிலும் தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை என காத்தான்குடி பிரதேசத்தில் கடமைபுரியும் திவிநெகும முகாரமயாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
“நமது கஸ்டங்கள் மாற்ற முடியாத தலை விதிகளல்ல” அக்குறணைக் கூட்டத்தில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: “இன்று நம் நாட்டில் வாழும் மக்கள் பல்வேறு நெருக்கடிகளையும், கஸ்டங்களையும் அனுபவித்து வருகிறார்கள். இவை மாற்ற முடியாத தலை விதிகளல்ல என்பதனை நாம் மறந்து விடக் கூடாது” என அக்குறனை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: “நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றமும், இளைஞர்களின் பங்களிப்பும்” என்ற தொனிப்பொருளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த விஷேட கலந்துரையாடலொன்று நேற்று மாலை மருதானையில் இடம்பெற்றது.
-
சிட்னி சம்பவம்: விசாரணை தொடர்கிறது
சிட்னி: சிட்னி நகரில் லிண்ட் கஃபே உணவகத்தில் பிணைக் கைதிகள் பிடித்துவைக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையின் நடவடிக்கை குறித்த விசாரணை துவங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காவல்துறையினர் அதிரடியாக அந்த உணவகத்திற்குள் புகுந்ததில், பிணைக் கைதிகளைப் பிடித்துவைத்திருந்த துப்பாக்கிதாரி தவிர, மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
-
மண்முனை வடக்கு திவிநெகும பயனாளிககளுக்கு மானிய உதவி 2500 ரூபாய் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம்’ எனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவி வழங்கும் பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கையில் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
-
சங்கக்காரவை இன்று இறுதியாகப் பார்த்துக்கொள்ளுங்கள்!
– MJ காத்தான்குடி: இலங்கை கிரிக்கட் அணியின் 1996 உலகக் கிண்ண வெற்றிக்கும், அதன் பின்னரான வெற்றிகளுக்கும் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கிய முன்னாள் வீரர்களான அர்ஜூனா ரணதுங்க மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரின் இடத்தை எவ்விதக் குறையுமில்லாமல் நிவர்த்தி செய்தவர்களே இன்றைய இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான குமார் சங்கக்காரவும், மஹேல ஜயவர்த்தனவும் ஆவர்.
-
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசிய ஷூறா சபையின் வழிகாட்டல்கள்
NSC கொழும்பு: இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துக்கான பின்வரும் வழிகாட்டல்களை தேசிய ஷூறா சபை வழங்க விரும்புகிறது.
-
‘மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக மாத்திரம் இருந்து விடாமல் அதற்காக உழைப்பவர்களாகவும் ஒவ்வொருவரும் மாற வேண்டும்’ – கட்டாரில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிரதிநிதிகள்
பழுலுல்லாஹ் பர்ஹான் தோஹா: ‘நம் நாட்டில் நல்லதொரு ஆட்சி மாற்றம் வேண்டுமென அனைவருமே எதிர்பார்க்கின்றனர். ஆனால் இதனை எதிர்பார்ப்பவர்களாக மாத்திரம் இருப்பதனால் எதனையும் சாதிக்கமுடியாது. இந்த மாற்றத்திற்காக உழைப்பவர்களாக எல்லோரும் மாற வேண்டும். அப்பொழுதுதான் இதனை ஒரு மக்கள் வெற்றியாக அடைய முடியும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கட்டாரில் தெரிவித்தனர்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடியில் கலந்து கொள்ளவுள்ள தேர்தல் மேடையை அமைப்பதற்காக நீலப் படை அணியினர் காத்தான்குடி விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: எதிர்வரும் 19-12-2014 வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடியில்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று 15-12-2014 திங்கட்கிழமை இரவு காத்தான்குடியில் இடம்பெற்றது.