“மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டு-மாவட்ட அபிவிருத்திக்கு தடையாக இருந்து விடக் கூடாது” – ஹிஸ்புல்லாஹ்

hizbullah– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கடந்ந ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் அநேகமான தமிழ் முஸ்லிம் மக்கள் தோற்றுப்போன சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்து எந்தப் பலனையும் அடையாதது போன்று இந்த ஜனாதிபதி தேர்தலிலும் தோற்றுப்போகவுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு தடையாக இருந்து விடக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ்-முஸ்லிம் வாழ்வின் எழுச்சி திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு மானிய உதவி வழங்கும் திட்டத்தில் சுமார் 600 பேருக்கு வீட்டு மானிய உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

hizbullah

இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் தமிழ்-முஸ்லிம் திவிநெகும பயனாளிகளுக்கு முதற்கட்ட வீட்டு மானிய உதவி 2500 ரூபாய் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச திவிநெகும அதிகாரி திருமதி .கலை செல்வி வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.முஸம்மில் , கல்லடி பிரதேச வாழ்வின் எழுச்சி திவிநெகும வங்கி முகாமையாளர் கே. தங்;கதுரை,கருத்திட்ட முகாமையாளர் திருமதி.பாலசுந்தரம் ஷாமினி, வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் மண்முனை வடக்கு பிரதேச திவிநெகும உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவிளான திவிநெகும பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

people

Published by

Leave a comment