Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடியில் தேர்தல் வன்முறைகளுக்கெதிரான பொது எதிரணியின் ஒருமித்த குரல்

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: காத்தான்குடியில் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று (3.1.2014) காத்தான்குடியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டாக வலியுறுத்தப்பட்டது.

  • மைத்திரியை ஆதரித்து NFGGயின் மகளிர் அணி ஏற்பாடு செய்த மாபெரும் பிரச்சாரக் கூட்டம்

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஒன்று காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை (02.01.2015) இடம்பெற்றது.

  • புத்தளத்தில் அரச தரப்பின் அடாவடித்தனங்கள்!

    NFGG ஊடகப்பிரிவு புத்தளம்: புத்தளம் அரசியல் விழிப்புணர்வு மன்றம் (Puttalam Political Awareness Forum – PPAF) அங்கத்தவர்கள் புத்தளம் மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றும் வாக்களிப்பில் பங்குகொள்ள வேண்டும் என்றும் மக்களை விழிப்புணர்வூட்டி வருகின்றனர். அவர்களது மக்களை விழிப்புணர்வூட்டும் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் புத்தளம் நகரில் இடம்பெற்று வருகின்றது.

  • குருநாகலயில் மைத்திரிக்கு ஆதரவு தெரிவி்த்து கூட்டம்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா குருநாகல்: எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு தெரிவி்த்து குருநாகலயில் இடம் பெற்ற கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் உரையாற்வதையும், கலந்து கொண்ட  புத்தி ஜீவிகள் மற்றும் அதிதிகளையும் படங்களில் காணலாம். 

  • வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் உள்ள ஒரு போராட்டமாக இந்த தேர்தலை நாம் பார்க்க வேண்டியுள்ளது: தேசிய தலைவர் றிசாத் பதியுதீன்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: இந்த  தேர்தல் என்பது சிறுபான்மை சமூகத்தின் வாழ்வினை அல்லது அழிவினை தீர்மாணிக்கும் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் கடந்த கால தேரதல்களை விட அனைத்து மக்களும் கடமையுணர்வுடன் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். சற்று முன்னர் புத்தளம் தில்லையடியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது தேசிய தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

  • பொலன்னறுவை மாவட்ட பாதுகாப்பில் விசேட அதிரடிப்படையினர்!

    பொலன்னறுவை: மைத்திரிபால சிரிசேனவின் சொந்த மாவட்டமான பொலன்னறுவையில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன கலந்து கொண்ட அரலகங்வில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  • மஹிந்தவின் அடியாள் என வர்ணிக்கப்படும் மற்றுமொரு புள்ளியும் அரிசிலிருந்து விலகிறார்…

    கொழும்பு: ஜனாதிபதியின் முக்கிய அடியாள் என்று வர்ணிக்கப்படும் ஆளுங்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ எதிரணிக்குத் தாவும் முடிவில் உள்ளார். இது தொடர்பாக பொது எதிரணியின் முக்கியஸ்தர்களுடன் அவர் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரது கட்சிதாவும் நடவடிக்கைக்கு தற்போது பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.

  • புத்தளத்தில் புத்திஜீவிகள் மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கண்டிக்கின்றது

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: புத்தளத்தில் கடந்த இரு தினங்களாக அரச தரப்பினால் புத்திஜீவிகள் மீது மேற்கொண்டுவரும்அடாவடித்தனங்களையும் தாக்குதல்களையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.

  • நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமாற்றத்தில் முஸ்லிம்கள் காத்திரமான பங்களிப்புச் செய்ய வேண்டும் – குருநாகல் ஐ.தே.க முஸ்லிம் சம்மேளன பொதுக்கூட்டத்தில் NFGGயின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத்

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குருநாகலை: குருநாகலையில் நேற்று (03.01.2015) மலை 3.00 மணியளவில் குருநாகல் மாவட்ட ஐ.தே.க முஸ்லிம் அமைப்பாளர் ஷஹாப்தீன் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற குருநாகல் ஐ.தே.க முஸ்லிம் சம்மேளன பொதுக்கூட்டத்தில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களான அகில விராஜ் காரியவசம், பாலித ரங்க பண்டார, அசோக அபேசிங்க, அ.இ.ம.கா தலைவர் ரிஷாத் பதியுத்தீன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி,

  • மஹிந்தவின் குடும்ப ஆட்சிக்கு ‘குட்பாய்’

    கொழும்பு: மஹிந்தவின் குடும்ப அரசாங்கத்தில் இருந்துவந்த முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான சரத் அமுனுகம, ஜனக பண்டார தென்னகோன், ரெஜினோல்ட் குரே, குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, எஸ்.பி. நாவின்ன ஆகியோரும், பிரதியமைச்சர்களான சனத் ஜயசூரிய,

  • மைத்திரியின் கூட்டம் மீது தாக்குதல்

    இரத்தினபுரி: இரத்தினபுரி மாவட்டம் பெல்மதுல்ல நகரில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டம் மீது கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறுகின்றார்.

  • ‘அழுத்கமை சம்பவ ஆதாரங்களை ஜனாதிபதியிடம் கொடுத்த போது அதற்கு அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’: ரிஷாட்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய சொத்தழிப்பு கலவரமாக அளுத்கம சம்பவம் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுங்கள் என்று ஆதாரங்களை ஜனாதிபதியிடம் கொடுத்த போது அதற்கு அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் தெரிவித்தார்.

←Previous Page
1 … 568 569 570 571 572 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar