பொலன்னறுவை: மைத்திரிபால சிரிசேனவின் சொந்த மாவட்டமான பொலன்னறுவையில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன கலந்து கொண்ட அரலகங்வில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தினை அடுத்து குறிப்பாக அரலகங்வில பகுதிக்கும், பொலன்னறுவை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையாளர் பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் சிறிய விடயங்கள் என்றும், அவற்றை பெரிதுபடுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
Published by

Leave a comment