நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமாற்றத்தில் முஸ்லிம்கள் காத்திரமான பங்களிப்புச் செய்ய வேண்டும் – குருநாகல் ஐ.தே.க முஸ்லிம் சம்மேளன பொதுக்கூட்டத்தில் NFGGயின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத்

naja– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

குருநாகலை: குருநாகலையில் நேற்று (03.01.2015) மலை 3.00 மணியளவில் குருநாகல் மாவட்ட ஐ.தே.க முஸ்லிம் அமைப்பாளர் ஷஹாப்தீன் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற குருநாகல் ஐ.தே.க முஸ்லிம் சம்மேளன பொதுக்கூட்டத்தில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களான அகில விராஜ் காரியவசம், பாலித ரங்க பண்டார, அசோக அபேசிங்க, அ.இ.ம.கா தலைவர் ரிஷாத் பதியுத்தீன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி,

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோரோடு NFGG செயலாளர் நஜா முஹம்மத் மற்றும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர் றிஸ்மி (காசிமி) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய நஜா முஹம்மத் ‘நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமாற்றத்தில் முஸ்லிம்கள் காத்திரமான பங்களிப்புச் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

naja

அவர் மேலும் கூறியதாவது, ‘நாம் எதிர் நோக்கியுள்ள 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். தற்போதைய அரசியலமைப்பிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் 2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அவர்கள் கொண்டுவந்த 18 ஆவது திருத்தச்சட்டமூலமும் இந்நாட்டின் முழு அரச இயந்திரத்தையும் ஒரு தனிநபரின் அதிகாரத்திற்குள் கொண்டுவந்திருக்கின்றது. இதனால் நாட்டில் ஒரு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் நெருக்கடியிலிருந்து இந்நாட்டை விடுவிப்பதற்கான ஒரு போராட்டமாகவே இந்தத்தேர்தல் மாறியுள்ளது. இந்த நாட்டின் சகல இன மக்களும் இவ்வாறான அரசியலமைப்பு முறை மாற்றத்திற்கு அணி சேர்ந்துள்ளனர்.

DSCN1991

இந்த அணியில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்று சேர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆகவே இப்போராட்டத்தில் முஸ்லிம்கள் காத்திரமான பங்களிப்பை ஆற்ற வேண்டும். முஸ்லிம்களிடத்தில் சுமார் 15 லட்சம் வாக்குகள் உள்ளன. இதில் குறைந்த பட்சம் 10 லட்சம் வாக்குகளையாவது பொது வேட்பாளருக்கு நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்போது பொது வேட்பாளர் பெரும் வாக்குகளில் இது அண்ணளவாக 18 வீதமாகும். ஆகவே இந்த தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு 20 வீதமாக இருக்கும். அதே போன்று குருநாகலையில் 1 லட்சம் முஸ்லிம் வாக்குகள் உள்ளன. இவ்வாக்குகள் மைத்திரிக்கு வழங்கப்படுமிடத்து முஸ்லிம்கள் மைத்திரிக்கு வழங்கிய வாக்குகளில் 10 வீதமானவர்களாக நீங்கள் மாறுவீர்கள்’ என்றார்.

FSCN1911

Published by

Leave a comment