மைத்திரியை ஆதரித்து NFGGயின் மகளிர் அணி ஏற்பாடு செய்த மாபெரும் பிரச்சாரக் கூட்டம்

unnamedNFGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஒன்று காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை (02.01.2015) இடம்பெற்றது.

காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்க மகளிர் அணி தலைவி சகோதரி. R. அனீஸா பிர்தௌஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் அணி இணைப்பாளர் சகோதரி. பஹ்மியா ஷரீப், தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி),  தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இம்மாபெரும் பிரச்சாரக் கூட்டத்திற்கு பெருமளவிலான பெண்கள் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment