புத்தளம்: புத்தளம் அரசியல் விழிப்புணர்வு மன்றம் (Puttalam Political Awareness Forum – PPAF) அங்கத்தவர்கள் புத்தளம் மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றும் வாக்களிப்பில் பங்குகொள்ள வேண்டும் என்றும் மக்களை விழிப்புணர்வூட்டி வருகின்றனர். அவர்களது மக்களை விழிப்புணர்வூட்டும் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் புத்தளம் நகரில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த இருநாட்களாக அவர்களது இந்த வேலைத்திட்டத்துக்கு புத்தளம் நகர பிதா அவர்கள் அவர்களது நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து வருகின்றார். அதன் உச்சகட்டமாக நேற்றும் இன்றும் குறித்த மன்ற அங்கத்தவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.
இத்தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய அடாவடித்தனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாக பங்கெடுத்து வருகின்றனர். நகரசபை உத்தியோகபூர்வ வாகனங்கள் பயன்படுத்தப்படுவதும் நகரசபை ஊழியர்கள் பயனபடுத்தப்படுவதும் அறியக்கிடைத்துள்ளது.
நகர சபை தலைவர் கே.ஏ பாயிஸ் அவர்களுடைய அரசியல் அடாவடித்தனங்கள் எல்லை மீறிச் சென்றிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் கூட பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்த அடாவடித்தனங்களை முழு இலங்கையிலுமுள்ள அனைத்து சமூகத்தவர்களும் தமது கண்டணங்களை தெரிவித்து வருவதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.
Published by



Leave a comment