Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “ஒற்றுமை, கல்வி, பிரதேச மக்களின் நலன் குறித்து அதிக கவனத்தை செலுத்துவது சாலச்சிறந்தது”

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: ஒற்றுமை, கல்வி, பிரதேச மக்களின் நலன் குறித்து அதிக கவனத்தை செலுத்துவது சாலச்சிறந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபாவா பாருக் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள அடம்பன் கட்டைக்காடு பரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

  • காத்தான்குடி நூதனசாலைக்கு 50 வருடம் பழமைவாய்ந்த கத்தி தீட்டுவதற்கான இயந்திரம் அன்பளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கலாசார மரபுரிமைகள் அமைச்சின் தேசிய நூதன சாலைத் திணைக்களத்தால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டு நிறைவுறும் தறுவாயில் இருக்கின்ற இலங்கையின் முதலாது இஸ்லாமிய நூதனசாலைக்கு சமுல மரத்தினால் செய்யப்பட்டு சுமார் 50 வருடம் பழமைவாய்ந்த சாணக் கல் என்று அழைக்கப்படும் கத்தி தீட்டுவதற்கான இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் அதிபர் காரியாலயம் திறந்து வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அதிபர் காரியாலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

  • “வடமேல் மாகாணத்தில் வாழும் சிறுபான்மை சமூகம் தமது அரசியல் அந்தஸ்த்தை தக்க வைக்கத்தவறும் பட்சத்தில் எதிர்கால சமூகத்தின் எதிர்பார்ப்பு பின்னடைவை சந்திக்க நேரிடும்”

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா  குருநாகல்: வடமேல் மாகாணத்தில் வாழும் சிறுபான்மை சமூகம் தமது அரசியல் அந்தஸ்த்தை தக்க வைக்கத்தவறும் பட்சத்தில் எதிர்கால சமூகத்தின் எதிர்பார்ப்பு பின்னடைவை சந்திக்க நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் குருநாகலயில் தெரிவித்தார்.

  • விரோதமாக செயற்பட்டால் சட்டத்தின் முன்னிறுத்துவோம்:மாவட்ட கடற்றொழில் திணைக்களம் எச்சரிக்கை-றுக்சான் குரூஸ்-(வீடியோ)

    – முகம்மட் சஜீ

  • திருமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 பேருக்கு நடந்தது என்ன?

    கொழும்பு: “திருகோணமலை கடற்படை முகாமில் கோட்டாபயவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 பேருக்கும் என்ன நடந்தது என்பதை புதிய அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்

    வெலிங்டன்: உலகக் கிண்ணத் தொடரின் ஒன்பதாவது போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் இன்று மோதுகின்றன. நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டிக்கு நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

  • காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான முயற்சியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

    டீன் பைரூஸ் காத்தான்குடி: மிக நீண்டகாலமாக அனைத்து பௌதீக வளங்களையும் கொண்ட காத்தான்குடி தள வைத்தியசாலையானது போதிய அளவிலான வைத்திய வசதிகள் இன்மையினால் அநேகமான நோயாளிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்ற ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது.

  • வீதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஷிப்லி பாறூக்

    டீன் பைரூஸ் காத்தான்குடி: அண்மையில் மஞ்சந்தொடுவாய் ஹிஸ்புல்லா வீதி, பாம் வீதி, கர்பலா வீதி, பெண்கள் சந்தை வீதி, போன்ற வீதிகள் புணரமைப்பதற்கு ‘மக நெகும’ என்ற தனியார் நிறுவனத்தினர் நிதி ஒதுக்கீடு செய்யாமல் செய்யப்பட்ட வீதி அபிவிருத்தி ஒப்பந்தம் செல்லுபடியாகாமல் போனது நீங்கள் அறிந்த ஓர் விடயம்.

  • த. தே. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலையில் பேசிய பேச்சுக்கான பகிரங்க பதில் – ஸ்ரீ. மு. காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்

    பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் திருகோணமலையில் பேசிய பேச்சுக்கான பகிரங்க பதில் ஒன்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

  • நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கட்டிடங்களையும், உடற்பயிற்சி நிலையங்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பார்வை

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கொழும்பு குதிரைப் பந்தயத் திடல், சுதந்திர சதுக்க பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கட்டிடங்களையும், உடற்பயிற்சி நிலையங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும், நடைபாதைகளையும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (19) அதிகாலையில் அவற்றைப் பராமரிக்கும் இராணுவ அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

  • காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் 2015 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் 2015 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 19-02-2015 வியாழக்கிழமை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 515 516 517 518 519 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar