காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் 2015 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 19-02-2015 வியாழக்கிழமை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம்.ஏ. சத்தார் தலைமையில் இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெவ்வை கலந்து கொண்டார்.
நான்கு இல்லங்கலாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டு போட்டியில் பச்சை நிறத்தில் போட்டியிட்ட ஜெஸ்மின் இல்லம் 326 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தையும், சிவப்பு நிறத்தில் போட்டியிட்ட றோஸ் இல்லம் 238 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும், மஞ்சள் நிறத்தில் போட்டியிட்ட ஓகிட் இல்லம் 231 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தையும், நீல நிறத்தில் போட்டியிட்ட லோட்டஸ் இல்லம் நான்காவது இடத்தையும் பெற்றிருந்தன.
இதன் போது அதிதிகளினால் இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவிகளுக்கு கிண்ணங்களும், சான்றிதழும், பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு மாணவிகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ் இல்ல விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். இஸ்மாலெவ்வை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். பதுர்தீன், ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) உட்பட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment