மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் அதிபர் காரியாலயம் திறந்து வைப்பு

hizbullah balika– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அதிபர் காரியாலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அதிபர் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வு 19-02-2015 நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன் போது அதிபர் காரியாலயம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

hizbullah balika

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெவ்வை,காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

hizbullah balika (2)

Published by

Leave a comment