குருநாகல்: வடமேல் மாகாணத்தில் வாழும் சிறுபான்மை சமூகம் தமது அரசியல் அந்தஸ்த்தை தக்க வைக்கத்தவறும் பட்சத்தில் எதிர்கால சமூகத்தின் எதிர்பார்ப்பு பின்னடைவை சந்திக்க நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் குருநாகலயில் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தில் உள்ள துறை சார்ந்தவர்கள், மற்றும் புத்தி ஜீவிகள் உடனான கலந்துரையாடலொன்று கெகுனுகொள்ளவில் நேற்று இரவு இடம் பெற்றது.
இதன் போது மேலும் கருத்துரைத்த அமைச்சர் றிசாத் பதியுதீன் –
இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆட்சி மாற்றத்தினை வேண்டினர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்ற வகையில் மக்களது தீர்மானத்தை நடை முறைப்படுத்த களத்தில் இறங்கினோம்.இன்று மக்களின் முகம்களில் சந்தோஷத்தை காணமுடிகின்றது.ஜனாதிபத மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த மக்கள் மட்டுமல்ல பொது ஜன ஜக்கிய முன்னணிக்கு வாக்களித்த மக்களிடமும் அதனை காணமுடிகின்றது.
எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி க்கு ஓரு தளம் இருக்கின்றது.எமது கட்சியின் மக்கள் பிரதி நிதிகள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ.அங்கு அம்மக்கள் பிரதி நிதிளிடத்தில் அந்த பிரதேசத்தின் பற்றிய முழுமையான தரவுகள் காணப்படுகின்றது.இதன் மூலம் மக்கள் பணிகளை இலகுபடுத்த முடியும்.
குருநாகல் மாவட்டத்தில் இரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்ள கூடிய பல சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டதாக இங்கு கருத்து முன் வைக்கப்பட்டது.இனிவரும் காலங்களில் அந்த நிலை ஏற்படாமல் இருக்க தேiவாயன கட்டமைப்புக்களை செய்ய வேண்டும்.அதற்காக நீங்கள் கொள்கை ரீதியான உடன்பாடு ஓன்றுக்கு வர வேண்டும்.இந்த உடன்பாடு எட்டப்படாதவிடத்து எமது இலக்கை அடைந்து கொள்ளமுடியாது.
ஏதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுகின்ற அணியாக நாம் மாற வேண்டும்.அதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும்.மக்கள் மீது இரக்கம் கொண்ட.இறையச்சம் கொண்டவர்கள்,இந்த அரசியலுக்கு வரவேண்டும். ஆரசியல் பதவிகள் ஓர ; அமானிதம் என்று சிந்தி;க்கின்றவர்கள் இப்பிரதேச மக்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமிட்,குருநாகல்,நக்கரவரட்டிய,கல்கமுவ .கொப்பே கனை பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பலரும் இதன் போது சமூகளித்திருந்தனர்.
Published by



Leave a comment