காத்தான்குடி: மிக நீண்டகாலமாக அனைத்து பௌதீக வளங்களையும் கொண்ட காத்தான்குடி தள வைத்தியசாலையானது போதிய அளவிலான வைத்திய வசதிகள் இன்மையினால் அநேகமான நோயாளிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்ற ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மிக நல்ல முறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த வைத்தியசாலையில் போதிய அளவிலான வைத்திய சேவைகளை வழங்க முடியாத அவலநிலை காணப்படுகிறது. இதனை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முழு அளவிலான இயக்கத்திற்கு கொண்டு வந்து சிறந்த சேவைகளை வழங்குவதற்கான முயற்சியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஷிப்லி பாறூக் அவர்கள் சுகாதார அமைச்சருக்கு விசேட வேண்டுகோள் விடுத்ததனையடுத்து, இராஜாங்க சுகாதார அமைச்சர் கௌரவ ஹசன் அலி (பா.உ) அவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விசேட குழுவொன்று எதிர்வரும் 25.02.2015ம் திகதி (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு வருகைதரவுள்ளது.
இதனடிப்படையில் இந்த வைத்தியசாலையானது எந்த வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது பற்றி ஆராயப்படவுள்ளது. இந்த விசேட நிகழ்வினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஷிப்லி பாறூக் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
Published by

Leave a comment