காத்தான்குடி: அண்மையில் மஞ்சந்தொடுவாய் ஹிஸ்புல்லா வீதி, பாம் வீதி, கர்பலா வீதி, பெண்கள் சந்தை வீதி, போன்ற வீதிகள் புணரமைப்பதற்கு ‘மக நெகும’ என்ற தனியார் நிறுவனத்தினர் நிதி ஒதுக்கீடு செய்யாமல் செய்யப்பட்ட வீதி அபிவிருத்தி ஒப்பந்தம் செல்லுபடியாகாமல் போனது நீங்கள் அறிந்த ஓர் விடயம்.
இந்த வீதிகள் மிகவும் மோசமாக சேதமடைந்து மக்கள் பாவனைக்கு உதவாமல் இருப்பபதனால் இந்த 4 வீதிகளையும் புணரமைப்பதற்காக பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷிம் (பா.உ) அவர்களுடன் தொடர்பு கொண்டு இவ் வீதிகளை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை நகர அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் கௌரவ ரவூப் ஹகீம் (பா.உ) அவர்களினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்ட இதற்குரிய மதிப்பீடுகளின் பிரதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஓர் முக்கியமான விடயம் என்னவெனில் பாம் வீதி அமைப்பதற்கு முன்பாக இதனை சரியாக திட்டமிட்டு டெலிகொம் வீதி, ஏத்துக்கால் (மீன்பிடி இலாகா வீதி) ஆகிய வீதிகளுக்கு நீர் வடிந்தோடக்கூடியவாறு மிக கட்டாயமாக வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும். இதனை சுட்டிக்காட்டிய மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் வீதி அமைப்பது மாத்திரமல்லாமல் அதற்குரிய வடிகால்கள் அமைக்க வேண்டும் என்பதனை மிக மிக அழுத்தமாக கூறியுள்ளார். இதனை நீர்ப்பாசன மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சினூடாகவும், பெருந்தெருக்கள் அமைச்சசினூடாகவும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே தாழ்நிலமாக இருக்கும் இந்த வீதிகள் உரிய முறையில் வடிகால் அமைக்கப்படாமல் வீதிகள் அமைக்கப்படுமானால் மக்கள் தற்போது இருக்கும் நிலையினை விட மிக பாரிய அளவிலான அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டி ஏட்படும். ஆகையினால் வீதி அமைப்புடன் வடிகால்களையும் அமைத்து தருமாறு கோரியுள்ளார்.
இந்த வீதி புணரமைப்புக்கள் 100 நாள் வேலைத்திட்டத்திட்குள் உள்வாங்கப்படுவதற்கான வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
Published by

Leave a comment