நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கட்டிடங்களையும், உடற்பயிற்சி நிலையங்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பார்வை

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: கொழும்பு குதிரைப் பந்தயத் திடல், சுதந்திர சதுக்க பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கட்டிடங்களையும், உடற்பயிற்சி நிலையங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும், நடைபாதைகளையும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (19) அதிகாலையில் அவற்றைப் பராமரிக்கும் இராணுவ அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

பொது மக்களின் பொழுது போக்கு இடமாகவும், உடற்பயிற்சிக்கான இடமாகவும் காணப்படும் இந்த பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்டது. இதன் ஒரு பகுதியை இராணுவத்தினரும், கடற்படையினரும் பராமரித்து வருவதோடு மற்றொரு பகுதியை விமானப் படையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்தப் பிரதேசத்தில் நடைபாதைகள் ஊடாகச் சென்ற போது அங்கு உடற்பயிற்சிக்காக வந்திருந்த பொது மக்களுடன் அமைச்சர் உரையாடி அவர்களது அபிப்பிராயங்களையும் கேட்டறிந்தார். இதன் போது மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் ஈரான் தூதுவரும், கொழும்பு மாநகர மேயராக இருந்தவருமான ஒமர் காமில் ஆகியோருடனும் அவர் உரையாடினார்.

பிரபல்யம் அடைந்து வரும் இந்தப் பிரதேசத்தை மேலும் எழில்மிக்கதாக்குவதற்கும், அபிவிருத்தி செய்யவதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

unnamed1

unnamed

Published by

Leave a comment