Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சிரியா போரின் உச்ச கட்டம் (பேசும் படம்)

    சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போரில் அரசாங்கப் படையினரின் ‘பரல் குண்டு’ வீச்சுக்களால் கட்டடங்களுக்குள் சிக்குண்டிருக்கும் பெண் ஒருவரை வெளியில் எடுப்பதற்கு அவசரப்பிரிவினர் முயற்சிப்பதைப் படத்தில் காணலாம்.

  • இரண்டாவது பெண் தூதரை நியமித்தது ஈரான்

    தெஹ்ரான்: ஈரானில் 1997ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்ட பிறகு முதல் முறையாக பெண் ஒருவரை அந்நாடு வெளிநாட்டுக்கு தூதராக நியமித்துள்ளது.எனினும் தற்போது வெளியுறவுத்துறையின் பேச்சாளராக இருக்கும் மார்சேய் அஃப்காம் எந்த நாட்டுக்கு தூதராக நியமிக்கப்படுவார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பகுதியளவில் அதிகாரபூர்வமான ஃபார்ஸ் மற்றும் மெஹ்ர் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

  • பொதி வைக்கும் இடத்தில் விமான ஊழியர் தூக்கம், திரும்பியது விமானம்

    நியுயோர்க்: அலஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில் சரக்குகள் வைக்கும் இடத்தில் ஊழியர் ஒருவர் தூங்கியதை அடுத்து, விமானம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் அடிப்பகுதியில் பயணிகளின் பெட்டி போன்ற சரக்குகளை வைக்கும் இடத்தில், பெட்டிகளை வைக்கும் ஊழியர்களில் ஒருவர் தூங்கிவிட்டாராம்.

  • “வவுனியா மாவட்ட இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர தேவையான உதவிகளை வழங்குவேன்”: அமைச்சர் றிஷாத்

    வவுனியா: வவுனியா மாவட்ட இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் இது தொடர்பில் கவனத்தை செலுத்துவதாகவும் கூறினார்.

  • ஜனாதிபதி மைத்ரி விரைவில் குணமடைய வேண்டுமென கிழக்கு ஊடக சங்கம் பிரார்த்தனை

    – EMS மட்டக்களப்பு: திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மிக விரைவில் பூரணமாகக் குணமடைந்து நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டுமென கிழக்கு ஊடக சங்கம் பிரார்த்தனை அறிக்கையொன்றை இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

  • இணைப்புச் செயலாளராக நியமனம்

    காத்தான்குடி: சமுர்த்தி, வீடமைப்பு பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ். அமீர் அலியின் இணைப்புச் செயலாளராக, காத்தான்குடி 06ம் குறிச்சியைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். மாஹிர் ஜே.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இவர், காத்தான்குடி ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலையின் முன்னாள் தலைவராகவும், மற்றும் பல உள்ளுர் நிறுவனங்களில் முக்கிய பதவிகளையும் வகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • மட்டு. ஹிழுறியா குர்ஆன் மத்ரஸாவின் புதிய கட்டிடத்திறப்பு விழா நாளை இடம்பெறும்

    – புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மஞ்சந்தொடுவாய்: மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள ஹிழுறியா குர்ஆன் மத்ரஸா கட்டிடம் நாளை 15ம் திகதி புதன்கிழமை மாலை 03:30 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களினால் அழ்ழாஹ்வின் திருப்பெயர் கொண்டு திறந்து வைக்கப்படும் என அம்மத்ரஸா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  • “நவீன தொழிநுட்பத்தினை பிழையான வகையில் இல்லாமல் பயனுள்ளதாக மாற்றவேண்டியது காலத்தின் தேவையாகும்”: கிழக்கு முதலமைச்சர்

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: தற்போதய நவீன தொழிநுட்பத்தினை பிழையான வகையில் இல்லாமல் பயனுள்ளதாக மாற்றவேண்டியது காலத்தின் தேவையாகும் இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்.  2014 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான விருதும் வழங்கும் நிகழ்வு EDF மற்றும் வாமி நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புள்ளா மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

  • ஈரானியர்கள் உம்ராவுக்குச் செல்ல ஈரான் தடை!

    தெஹ்ரான்: ஈரானியர்கள் உம்ரா புனித யாத்திரைக்குச் செல்வதை ஈரான் இடைநிறுத்தி வைத்திருக்கிறது. ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே, யெமன் மோதல் குறித்த பிரச்சினையில் உறவுகள் மோசமடைந்து வருவதன் பின்னணியில் இந்த நடவடிக்கை ஏற்பட்டிருக்கிறது.

  • வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக மீ்ண்டும் அமைச்சர் றிசாத் பதியுதீன்

    வன்னிகுரலான் வன்னி: வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக மீ்ண்டும் அமைச்சர் றிசாத் பதியுதீனை ஜனாதிபதி நியமித்துள்ளமைக்கு பல்வேறு அமைப்புக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது நன்றியினை தெரிவித்து கடிதங்களை அனுப்பியுள்ளன.

  • மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு, பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது

    கொழும்பு: மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டதாக டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நஷனலின் இலங்கைக் கிளை தெரிவித்துள்ளது. உலகளவில் ஊழலுக்கு எதிராகவும், அரசுகள் வெளிப்படைத் தன்மையைப் பேண வேண்டும் என்பதைக் கோட்பாடாகக் கொண்டும் இயங்கும் டிரான்ஸ்பெரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு, இலங்கை அரசு மீது சில விமர்சனங்களை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

  • மட்டு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன நிருவாகத் தெரிவுக் கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சம்மேளன நிருவாகிகள் எவரும் பங்கேற்கவில்லை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் புனரமைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 463 464 465 466 467 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar