வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக மீ்ண்டும் அமைச்சர் றிசாத் பதியுதீன்

Rishad-Bathiudeen1வன்னிகுரலான்

வன்னி: வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக மீ்ண்டும் அமைச்சர் றிசாத் பதியுதீனை ஜனாதிபதி நியமித்துள்ளமைக்கு பல்வேறு அமைப்புக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது நன்றியினை தெரிவித்து கடிதங்களை அனுப்பியுள்ளன.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன ஆகிய உங்களுக்காக துணிந்து களமிறங்கி இலங்கைியல் உள்ள முஸ்லிம் மக்களது வாக்குகளை அள்ளிக் கொட்டி அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பாக வன்னி மாவட்டத்தை பொறுத்த வரையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை சிறந்த தலைவராக காண்கின்றனர். அதனால் தான் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் அவருக்கும் அவர் குறிப்பிடும் வேட்பாளர்களுக்கும் வாக்குகளித்து அவர்கைளயும் வெற்றிபெற செய்தும் வருகின்றனர்.

குறிப்பாக நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், வடக்கில் உள்ள மூவின மக்களும் அதிகப்படியான வாக்குகளை உங்களுக்கு அளித்து உங்களின் வெற்றியினை உறுதிப்படுத்தினர்.

மைத்திரிபால சிறிசேன ஆகிய நீங்கள் பொது வேட்பாளராக களமிறங்கிய போது முதன் முதலில் தமது அணியுடன் துணிந்து உங்களை ஆதரிக்க புரப்பட்டவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை நீங்கள் ஒரு போதும் மறந்துவிடமாட்டீர்கள் என்பது எமது நம்பிக்கையாகும். அன்றைய மேடைகளில் நீங்கள் குறிப்பிட்டதாவது இலங்கை முஸ்லிம்களை நெறிப்படுத்த போதுமான துணிவும், துணிச்சலும், நேர்மைத்தன்மை கொண்ட ஒரு முஸ்லிம் தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதினை அடையாளப்படுத்துவதாக, அந்த வகையில் நீங்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை கௌரவப்படுத்தியுள்ளீர்கள்.

அரசியல் ரீதியாக காழ்புணர்வு கொண்டவர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் கடடுக்கதைகளை கூறிவருகின்ற போதும், அது அவர்களத வங்குரோத்து அரசியல் நிலையினை வெளிக்காட்டுவதாக அறிந்து கொண்ட நீங்கள் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீனையும், இலங்கை முஸ்லிம்களை கௌரவப்படுத்தும் வகையிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பில் தீர்மாணிக்கும் ஒரு சக்தியாக இந்த நாட்டுக்கு அறிவுத்துள்ளமைக்கு எமது உயர்ந்த நன்றிகளை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இனவாத செயற்பாடுகளை முழுமையாக துடைத்தெரிந்து இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்துவதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்த வேகத்தின் வெளிப்பாடு இன்று நீங்கள் இந்த நாட்டில் மக்கள் சுதந்திரமாக, அச்சமற்ற சூழலில் வாழக் கூடிய நிலையினை தோற்றுவித்துள்ளது.

இருந்த போதும் இன்று ஒருசில அரசியல் வாதிகள் உங்களது அரசாங்கத்தின் அமைச்சர்களை தனிப்பட்ட சில அரசியல் பதவிகளுக்காக விமர்சனம் செய்துவருகின்றனர். கடந்த உங்களது தேர்தலில் இவர்கள் கிராமங்களுக்குள் சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏஜென்டுகளாக உங்களுக்கு ஆதரவு வழங்கிய அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக செயற்பட்டு வன்னி மக்கள் உங்களை தோற்கடித்துவிட்டார்கள் என்ற செய்தியினை சொல்ல முற்பட்ட போதும், அமைச்சர் றிசாத் வன்னி மாவட்ட மக்களுடன் கொண்டிருந்தத நெருக்கத்தின் வெளிப்பாடு உங்களது வெற்றி என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அந்த வகையில் தற்போது நீங்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி குழுக்களின் தலைவராக நியமித்து அனைத்து அரச திணைக்களங்கள் மற்றும் அரச சார்பாற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் செயற்பாடுகள் மற்றும் அதனோடு இணைந்த அபிவிருத்தி பணிகள் என்பனவற்றை தீர்மாணிக்கும் ஒரு சக்தியாக அமைச்சர் றிசாத் பதியுதீனை அறிமுகப்படுத்தியுள்ளமையின் மூலம் நீங்கள் ஒரு நேர்மையான ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள் என எம்மால் கோடிட்டு காட்ட முடிகின்றது என்றும் அந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வன்னி மாவட்ட தமிழ்-முஸ்லிம் ஒன்றியம், வடக்கு மாகாண மத அமைப்புக்களின் ஒன்றியம், வன்னி கலாசார அமைப்பு, வவுனியா மாவட்ட இன ஒற்றுமைக்கான ஒன்றியம், சமூக நீதிக்கும், இன ஒற்றுமைக்குமான ஜனநாயக ஒன்றியம், என்பன இந்த கடிதங்களை ஜனாதபதிக்கு அனுப்பியுள்ளது.

Published by

Leave a comment