காத்தான்குடி: தற்போதய நவீன தொழிநுட்பத்தினை பிழையான வகையில் இல்லாமல் பயனுள்ளதாக மாற்றவேண்டியது காலத்தின் தேவையாகும் இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தெரிவித்தார். 2014 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான விருதும் வழங்கும் நிகழ்வு EDF மற்றும் வாமி நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புள்ளா மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் பொலந்நறுவை மாவட்டங்களைச் சேர்ந்த 741 மாணவர்கள் இதன்போது சின்னங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
தொழிநுட்பத்துறை இன்று பாரிய வளர்ச்சி கண்டுள்ள நிலையில் அதில் தீமையும் உள்ளது நன்மையும் உள்ளது மாணவர்கள் பயனுள்ளதை மாத்திரமே தெரிவு செய்து கற்றுக்கொள்ள வேண்டும் பெற்றோர்கள் அதை கண்காணிக்க வேண்டும்.
எனது தந்தை என்னுடன் கல்விகற்றல் குர்ஆன் ஓதல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்வார் நாளாந்தம் காலையிலும் மாலையிலும் குர்ஆனை மனனம் செய்து தந்தையிடம் ஓதிக்காட்ட வேண்டும். அதேபோல் ஐவேளையும் ஜமாஅத்தாக தொழாவிட்டால் தண்டனை கிடைக்கும் இவ்வாறுதான் நான் பழக்கப்பட்டேன். இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வுக்கு மாவட்ட அரச அதிபர் பி எஸ் எம்.சார்ள்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு எல் எம் என் முபீன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிப்பணிப்பாளர் இஸ்மாலெவ்வை ஆகியோர் கலந்துகொண்டதுடன், பாடசாலை ரீதியாக 10 க்கு மேற்பட்ட மாணவர்களை சித்திபெறச் செய்த பாடசாலைகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment