மட்டு. ஹிழுறியா குர்ஆன் மத்ரஸாவின் புதிய கட்டிடத்திறப்பு விழா நாளை இடம்பெறும்

abdullah judge– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

மஞ்சந்தொடுவாய்: மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள ஹிழுறியா குர்ஆன் மத்ரஸா கட்டிடம் நாளை 15ம் திகதி புதன்கிழமை மாலை 03:30 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களினால் அழ்ழாஹ்வின் திருப்பெயர் கொண்டு திறந்து வைக்கப்படும் என அம்மத்ரஸா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சந்தொடுவாய் மஸ்ஜிதுல் ஹிழுர் ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் சகோதாரர் எம்.எஸ். அபுல்ஹஸன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களும், கௌரவ அதிதிகளாக காத்தான்குடி குர்ஆன் அபிவிருத்திச் சபைத் தலைவர் ‘ஷெய்குல் பலாஹ்’ அல்ஹாஜ் மௌலவி எம்.ஏ. அப்துழ்ழாஹ் றஹ்மானி, காழி நீதிபதி அல்ஹாஜ் மௌலவி எஸ்.எம். அலியார் பலாஹி, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி ஏ.எம். அப்துல்காதர் பலாஹி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

abdullah judge
நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ்

பொதுமக்கள், மஹல்லாவாசிகள் அனைவரையும்; இச்சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இப்பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.

Published by

Leave a comment