Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்வு

    எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: எந்த உத்தியோகத்தருக்கும் கிடைக்காத வறிய மக்களுடன் வேலை செய்யும் பாக்கியம் திவிநெகும என கூறப்படும். சமுர்த்தி  உத்தியோகத்தர்களுக்கு கிடைத்துள்ளது, அதை அவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாலவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். 

  • வறிய திறமையான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு – 2015

    OPEN Education Centre காத்தான்குடி: ‘சமுதாயப்பணி செய்யும் போது எவ்வகையான விமர்சனங்கள் வந்த போதும் அபாண்டங்களை அள்ளியெறிந்து அவமானங்களைத் தர எவர் முயன்றாலும், அவைகளைப் புறக்கணித்து இறைத்திருப்தியை மட்டுமே நோக்காகக் கொண்டு சமுதாயப் பணியைக் கச்சிதமாகச் செய்வதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

  • 20ஆவது சமர்ப்பித்தால் 19க்கு ஆதரவு: சு.க குழுக்கூட்டத்தில் வலியுறுத்தல்

    கொழும்பு: தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாலே 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

  • ‘போதைப்பொருள் ஹராம்’ கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம்

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: போதைப்பொருள் ஹாராம் எனும் தொனிப்பொருளில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை (10.04.2015) ஜும்மா தொழுகைக்கு பிற்பாடு ஆர்ப்பாட்டமாக இடம் பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல்மாகாணத்தின் 176 பள்ளிவாயல்களின் பிரதி நிதிகள் பங்கேற்றதுடன், தேசிய ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

  • யாழ். ஊடகவியாளர்கள் மீது பொலிசார் மேற்கொள்ளும் அடாவடி அச்சுறுத்தல்களுக்கு கிழக்கு ஊடக சங்கத்தின் வன்மையான கண்டனம்

    EMS யாழ்ப்பாணம்: யாழ். ஊடக அமையத்தின் தலைவர் த. வினோஜித், ஹிரு தொலைக்காட்சி செய்தியாளர் த. பிரதீபன் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் மயூதரன் ஆகியோர் மீது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிசார் சிவில் உடையணிந்தவர்களாக மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து வழி மறித்து கத்தியால் குத்திக் கொலை செய்ய எத்தனித்த சம்பவம் தொடர்பில் கிழக்கு ஊடக சங்கம் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

  • வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயம் சம்பிரதாயபூர்வமாக மன்னாரில் திறந்துவைக்கப்பட்டது

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: வடக்கில் வாழும் முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக இயங்க உள்ள  வடமாகாண முஸ்லிம் பிரஜைகளுக்கான குழு (Northern Muslim Citizens Committee – NMCC) பிரதான காரியாலயம் ஏ.எச்.எம். முபாரக் மெளலவி தலைமையில் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது.

  • அமைச்சர் றிசாத் பதியுதீனால் புல்மோட்டை மக்களுக்கு நிதி உதவி

    இர்ஷாத் றஹ்மத்துல்லா புல்மோட்டை: திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட புல்மோட்டை கிராமத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று விஜயம் செய்தார்.

  • இன, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளில்லாத ஐக்கிய இலங்கை மலர வேண்டி கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி

    EMS மட்டக்களப்பு: மனங்கொள்ளாத வெற்று வார்த்தைகளால், இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியையும் வேண்டி புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதிலும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதிலும் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை. அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் பலன் தர வேண்டுமாயின் அதற்காக நமது மனங்கொண்ட செயற்பாடுகள் அவசியமாகும் என கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத் தாமதத்திற்கு காரணம் ஹரீஸ் எம்.பி?

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத் தாமதத்திற்கு காரணம் ஹரீஸ் எம்.பி? ஜூம்ஆப் பள்ளி விளக்கம் என குதர்க்கமாக தலைப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாட்டினை மழுங்கடிக்கச் செய்யும் திரிவுபடுத்தப்பட்ட செய்திக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எவ்வித சம்பந்தமில்லை என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

  • அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று புல்மோட்டைக்கு விஜயம்

    புல்மோட்டையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா புல்மோட்டை: புல்மோட்டை கனியவள கூட்டுதாபனத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி நாட்டுக்கும், பிரதேசத்திற்கும்  நன்மை பயக்கும் வகையில் செயலுருவம் வழங்கவுள்ளதாக கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

  • வலிகாமம் காணி உரிமையாளர்கள் காணிகளை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள்

    ஏ.எல்.எம். தாஹிர் வலிகாமம்: வலிகாமம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணி உரிமையாளர்கள் பிரதேச செயலகங்களுக்கு வந்து தங்களது காணிகளை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

  • “பெண்ணின் சதையை உண்ணலாம்”: பொய்யான ஃபத்வாவை மறுக்கிறார் முப்தி அப்துல் அஸீஸ்

    – MJ றியாத்: “பசித்திருக்கும் மனிதன் உண்பதற்கு உணவுகள் இல்லாதபட்சத்தில், பெண்களைக் கொண்டு, பெண்ணின் சதையை உண்ணலாம்” எனும் மார்க்கத் தீர்ப்பு அண்மையில் வெளியாகியதை, வண்மையாககக் கண்டித்திருக்கும் சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முப்தியான அஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ், இது இஸ்லாமியர் அல்லாதவர்களால் வெளியிடப்பட்ட போலியான மார்க்கத் தீர்ப்பாகும் என அறிவித்துள்ளார்.

←Previous Page
1 … 465 466 467 468 469 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar