இரண்டாவது பெண் தூதரை நியமித்தது ஈரான்

iranதெஹ்ரான்: ஈரானில் 1997ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்ட பிறகு முதல் முறையாக பெண் ஒருவரை அந்நாடு வெளிநாட்டுக்கு தூதராக நியமித்துள்ளது.எனினும் தற்போது வெளியுறவுத்துறையின் பேச்சாளராக இருக்கும் மார்சேய் அஃப்காம் எந்த நாட்டுக்கு தூதராக நியமிக்கப்படுவார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பகுதியளவில் அதிகாரபூர்வமான ஃபார்ஸ் மற்றும் மெஹ்ர் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

ஈரானில் மிகவும் உயர்மட்டத்தில் செல்வாக்கு மிக்க பெண்மணிகளில் அஃப்காம் அம்மையாரும் ஒருவர். அந்நாட்டின் சார்பில் இரண்டாவாதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் தூதர் இவர்தான். இவருக்கு முன்னர் 1970களில் மெஹ்ரங்கிஸ் டொலட்ஷாகி டென்மார்க்குக்கான ஈரானியத் தூதராக பணியாற்றினார்.

iran

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, நாட்டில் பெண்களுக்கான உரிமைகளை மேம்படுத்த அதிபர் ஹஸன் ரௌஹானி உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமது தேர்தல் பிரச்சாரத்தின்போதே அவர் மகளிர் உரிமைகள் குறித்து பேசியிருந்தார்.

Published by

Leave a comment