Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முச்சக்கரவண்டி 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

    தெனியாய: மாத்தறை – தெனியாய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பிற்பகல் இங்குருபனாகல பிரதேசத்திலிருந்து தெனியாய நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டி ஓலகந்த என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளமொன்றில் விழுந்துள்ளது.

  • ‘நல்ல, தீய முடிவுகளின் அடையாளங்கள்’ என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் -அப்பாஸி   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அல்மனார்: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 16/04/2015 வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

  • நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான ஹரப்பா காலத்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

    டெல்லி: இந்தியாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் நிலவிய காலமான ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் நான்கை தோண்டியெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த எலும்புக்கூடுகள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.

  • இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை

    கொழும்பு: இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இது நடைமுறைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தினால் புதனன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

  • ஊடகவியலாளர்களை குழப்பக்காரர்கள் எனக் கருத்துக்கூறி அனுமதி மறுத்த யாழ். அரசாங்க அதிபருக்கு கிழக்கு ஊடக சங்கம் கண்டனம்

    – EMS யாழ்: சமூகப் பொறுப்புடன் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், அசௌகரியங்களுக்கும் மத்தியில் பொதுமக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களை குழப்பவாதிகளாகச் சித்தரிக்க முயற்சித்துவரும் யாழ். அரசாங்க அதிபர் என். வேதநாயனின் செயற்பாட்டிற்கு கிழக்கு ஊடக சங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

  • வளர்ந்தோருக்கான குர்ஆன் மத்ரஸாக்களை நிறுவுவதற்கும் காத்தான்குடி சமூகம் முயற்சிக்க வேண்டும்! குர்ஆன் மத்ரஸா திறப்பு விழாவில் நீதிபதி அல்ஹாபிழ் அப்துழ்ழாஹ் வேண்டுகோள்

    புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மஞ்சந்தொடுவாய்: சிறுவர் சிறுமியருக்கான குர்ஆன் மத்ரஸாக்களை நிறுவுவது போல் வளர்ந்தோருக்கான குர்ஆன் மத்ரஸாக்களை நிறுவுவதற்கும் காத்தான்குடி சமூகம் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் வேண்டுகோள்விடுத்தார்.

  • நான் வானத்தில் இருந்து கொண்டாவது இம்முறையும் பாராளுமன்றம் செல்வேன்: பசீர் சேகு தாவூத்

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்  

  • காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஒருநாள் தலைமத்துவ பயிற்சி முகாம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி  இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பாடசாலையில் தரம் ஒன்பது, பத்து ஆகிய தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களை தலைமைத்துவ ரீதியில் பயிற்றுவிக்கும் முகமாக ஒருநாள் தலைமத்துவ பயிற்சி முகாம் ஒன்று கடந்த 14-04-2015 நேற்று செவ்வாய்க்கிழமை பாலமுனை கடற்கரை வளாகத்தில் இடம்பெற்றது.

  • சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி

    ஹாசிப் யாஸீன், எம்.ஐ.சம்சுதீன் கல்முனை: சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்திற்கும் அநுராதபுரம் ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்திற்குமிடையே சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.

  • இரண்டு கோடி ரூபா தங்க நகைகளை பனியனினுள் மறைத்து கடத்த எடுத்த முயற்சி முறியடிப்பு

    – எம்.ஐ.  அப்துல் நஸார் கொழும்பு: இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை தமது பனியனினுள் வைத்து மறைத்து இந்தியாவின் சென்னை நகருக்கு கொண்டு செல்வதற்கு வந்த இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

  • காத்தான்குடியில் அருங்காட்சியம் திறந்து வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில் காத்தான்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பூர்வீக நூதனசாலை (மியூசியம்) இன்று 15-04-2015 புதன்கிழமை மக்கள் பார்வைக்காக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

  • புத்தாண்டில் சிவப்பு ஆடைக்கு மாறிய மஹிந்த குடும்பத்தினர்!!

    ஹம்பாந்தோட்டை: பிறந்திருக்கும் புதுவருடத்தில் மஹிந்த குடும்பத்தினர் மொத்தமாக சிவப்பாடையில் மாறியிருந்தனர். மகிந்த ராஜபக்‌ஷவிற்கு இந்த சிவப்பில் அதிகம் ஈர்ப்பு. ஒரு வேளை சிவப்பு நிறம் ராசியானது என்று யாரேனும் ஜோதிடம் கணித்து கொடுத்தார்களோ என்னமோ தெரியாது சிவப்பின் மீது அவ்வளவு பற்று அவருக்கு.

←Previous Page
1 … 462 463 464 465 466 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar