-
“கிராமங்களை அபிவிருத்தி செய்வதே கட்சியின் பிரதான நோக்கம்”: ஐ.தே.க. அமைப்பாளர் முஸ்தபா
– முகம்மட் சஜி காத்தான்குடி: பிரதம மந்திரி ரணில் விக்கிரசிங்கவின் தலைமையிலான கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியினை நாடு பூராகவும் புணமைக்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ் வேலைத்திட்டம் முன்னடுக்கப்பட்டு வருகின்றன.
-
எம்.பிக்களின் எண்ணிக்கை 237
கொழும்பு: தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு நேற்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதன் படி பாராளுமன்ற உறுப்பினர் தொகை 237 ஆக உயர்த்தப்பட இருப்ப தோடு தொகுதிவாரி முறையினூடாக 145 எம்.பிக்களும் தேசியப் பட்டியல் ஊடாக 37 எம்.
-
“இறைவன் எனக்கு அருளிய சொந்த நிதியில் இருந்து 62 இலட்சம் ரூபாய் செலவு செய்து பாம் வீதியை செப்பனிடவுள்ளேன்”: சிப்லி பாறுாக்
காத்தான்குடி: மிக நீண்ட காலமாக செப்பனிடப்படாமலும், பராமரிக்கப்படாமலும் விடப்பட்டிருக்கும் பாம் வீதி அமைக்கின்ற விடயமானது தொடர்ச்சியாக பல இழுத்தடிப்புக்கள் செய்யப்பட்டு வருகின்றது. இதில் அதியுயர் பட்சமாக இந்த பாம் வீதி அமைப்பதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தத்தினையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிகாரத்தினை பயன்படுத்தி நிறுத்திவிட்டு அப்பழி என் மீது சுமத்தப்பட்டது.
-
வட முஸ்லிம்களுக்கு புத்தளம் மக்கள் வழங்கிய பேராதரவு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: வந்தாரை வாழ வைத்த ஊர் புத்தளம் 25 வருடங்களாக வடக்கு மக்கள் இரண்டரக் கலந்த புத்தளம் மண்ணில் நேற்று வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கௌரவமானதாக இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக அமைந்துள்ள 1400 மினாரா கோபுரத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்து விசேட செட்டின் கீழ் புத்தளம் மக்கள் தமது கையொப்பங்களை இட்டனர்.
-
வட முஸ்லிம்களுக்கு திருமலை மக்கள் வழங்கிய பேராதரவு
– அபூ அஸ்ஜத் திருகோணமலை: மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை தடுக்கும் வகையில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டங்களை சுமத்தும் பௌத்த கடும் போக்கு சிங்கள அமைப்புக்களின் செயலணி கணடடித்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேர்மையான முறையில் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரித மாக மேற்கொள்ளய கோறும் வகையில் நாடு தழுவிய முறையில்
-
“மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவில்லை”
– கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவில்லை அவர்கள் அவர்களது பதவிகளை தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள மேல் மாகாண சபையின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புதிய அரசாங்கம் இந்த விடயத்தை கிடப்பில் போடாமல் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தார்.
-
20 அரசியல் சாசன திருத்தச் சட்ட மூலம் ஜனநயாக மரபுகளை மீறுகின்றது எததிரர்கால கலவரங்களுக்கே வித்திடுகின்றது
– அஷ்-ஷெய்க் கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: “இரண்டு பெரிய கட்சிகளும் ஒன்றிணைந்து அவசர அவசரமாக மேற்படி திருத்தச் சட்டமூலத்தை திணிப்பதுவும், தேவைப்படின் சிறுபான்மை சமூகங்களும் சிறிய கட்சிகளும் குறிப்பிட்ட காலவரையரைகளுக்குள் நீதிமன்றம் செல்லுங்கள் என்று கூறுவதும் ஜனநாயக மரபுகளை மீறுகின்ற செயலாகும்.
-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மீலாத் தினப் போட்டிகள் மீண்டும் நடாத்தப்படுமா?
விஷேட நிருபர் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் 2015 ம் ஆண்டுக்கான மீலாத் தினப் போட்டிகள் கடந்த ஜுன் 06ம், 07ம் திகதிகளில் ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது. இப் போட்டிகளில் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு கோட்டப் பாடசாலைகளில் முதலாம் இடம் பெற்று தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-
காத்தான்குடி வைத்தியசாலைக்கு பொருட்கள் அன்பளிப்பு
விஷேட நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு எக்ஸ்ரே படங்கள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் பேக்குகள் மட்டக்களப்பில் இயங்கிவரும் பிரபல நவநாகரீக ஆடையகமான சத்தார் டெக்ஸ்டைல்ஸினால் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
-
எ.சி எஹியாகான் பணிப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்
எ.சி எஹியாகான் அம்பாறை: UDA யின் கீழ் உள்ள Onally Holdings PLC நிறுவனத்துக்கு எ.சி எஹியாகான் பணிப்பாளாராக SLMC உடைய தேசிய தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!
ஏறாவூர் அபூ பயாஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட சங்கர் புரம், மன்டூரை சேர்ந்த வீரக்குட்டி தியாகராஜா (50) என்பவர் (10-06-2015) மதியவேளை புல்லுமலை, வெளிக்காக்கண்டி, தெரணியகல எனுமிடத்தில் வைத்து யானையின் தாகுதலுக்குள்ளாகி மரணித்துள்ளார்.
-
காத்தான்குடி நகரசபை பிரிவில் குப்பைகளை அகற்றுமாறு கோரி பிரதான வீதியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரசபைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் சேருகின்ற குப்பைகளை அகற்றுமாறு கோரி, காத்தான்குடி நகரசபை மற்றும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டமொன்று இன்று (11.06.2015) வியாழக்கிழமை இடம்பெற்றது.