காத்தான்குடி: மிக நீண்ட காலமாக செப்பனிடப்படாமலும், பராமரிக்கப்படாமலும் விடப்பட்டிருக்கும் பாம் வீதி அமைக்கின்ற விடயமானது தொடர்ச்சியாக பல இழுத்தடிப்புக்கள் செய்யப்பட்டு வருகின்றது. இதில் அதியுயர் பட்சமாக இந்த பாம் வீதி அமைப்பதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தத்தினையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிகாரத்தினை பயன்படுத்தி நிறுத்திவிட்டு அப்பழி என் மீது சுமத்தப்பட்டது.
இருந்த போதிலும், இப் பிரச்சனை காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் மிகத் தெளிவாக விசாரிக்கப்பட்டு என் மீது சுமத்தப்பட்ட அபாண்டம் நீக்கப்பட்டது இருந்த போதிலும் தொடர்ந்தும் அப்பகுதியில் வாழும் மக்களும், பாடசாலை சிறுவர்களும், அவ் வீதியை பயன்படுத்துபவர்களும் தொடர்ச்சியாக பல கஸ்டங்களை அனுபவித்து வருபதினாலும் நிரந்தர தர்மம் ஒன்றை செய்வதனூடாக அழ்ழாஹ்விடமிருந்து கூலியை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இவ் வீதியினை முற்று முழுதாக இறைவன் எனக்கு அருளிய சொந்த நிதியில் இருந்து 62 இலட்சம் ரூபாய் செலவு செய்து இவ் வீதியினை கொன்க்ரீட் இட்டு செப்பனிட என்னியுள்ளேன்.
இதற்கான ஆரம்ப வைபவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 14.06.2015 அன்று மாலை 4.30 மணிக்கு இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் இதில் சகலரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
Published by

Leave a comment