மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட சங்கர் புரம், மன்டூரை சேர்ந்த வீரக்குட்டி தியாகராஜா (50) என்பவர் (10-06-2015) மதியவேளை புல்லுமலை, வெளிக்காக்கண்டி, தெரணியகல எனுமிடத்தில் வைத்து யானையின் தாகுதலுக்குள்ளாகி மரணித்துள்ளார்.
தனது மாடுகளை மேய்ப்பதற்காக வெளிக்காக்கண்டியில் பட்டியடி அமைத்து தொழில் புரிந்து வந்த இவர் தனது மாடுகளை மேய்க்கும் ராசு உதயசீலன் (17) என்பவருக்கு பகல் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு செல்லும் வழியிலேயே யானையின் தாகுதலுக்குள்ளாகியுள்ளார்.
மாடு மேய்க்க சென்ற மேற்படி நபர் மாலை 05.00 மணியளவில் மாடுகளை சாய்த்துக்கொண்டு பட்டியடி திரும்பும்போது வழியில் தியாகராஜா என்பவரின் உடைமைகளான தொப்பி, பாதணி, தண்ணீர் போத்தல், சாப்பாடு கொண்டுவந்த கோப்பை என்பவற்றை வழியில் கண்டதால் நண்பர்களின் உதவியுடன் தியாகராஜாவை தேடியபோது சிறிது தூரத்தில் காட்டுப்பகுதிக்குள் யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மரணித்துக் கிடப்பதை கண்டுள்ளனர்.
கரடியானறு பொலிசாருக்கு விடயம் தெரிவிக்கப்பட்டதும், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், செங்கலடி வைத்தியசாலைக்கு பிரேதம் அனுப்பி வைக்கப்பட்டு பிரேதப்பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Published by


Leave a comment