-
கட்சி மாறவில்லை பொய் பிரச்சாரத்திற்கு இடமளிக்க வேண்டாம்: கே.பீ.எஸ். ஹமீட்
எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: கட்சி மாறவில்லை பொய் பிரச்சாரத்திற்கு இடமளிக்க வேண்டாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிகாக நான் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றேன். என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் ஊடகங்களுக்கு விஷேட கருத்து தெரிவித்துள்ளார்.
-
காத்தான்குடியில் தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ் ஐயூப் கலந்து கொள்ளும் இஸ்லாமிய மாநாடு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ் ஐயூப் கலந்து கொள்ளும் இஸ்லாமிய மாநாடு 13-06-2015 நாளை மறுதினம் சனிக்கிழமை காத்தான்குடி -06 மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாகவுள்ள பஸ்பலா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. றவூப் தெரிவித்தார்.
-
அந்தநாள் ஞாபகம்-3: காத்தான்குடியின் கால்பந்தாட்டப் பொற்காலம்
– MJ காத்தான்குடி: 1970களில் காத்தான்குடியில் கரப்பந்து மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுக்கள் ஒருவகையில் அவ்வப்போது விளையாடப்பட்டு வந்த போதிலும், 1980களின் ஆரம்பத்திலேயே காத்தான்குடி கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்றிருந்தது.
-
காத்தான்குடியில் ஜம்இய்யது தாறுல் பிர் நிறுவனத்தினூடாக வறிய குடும்பங்களுக்கான குழாய்க்கிணறு விநியோகம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜம்இய்யது தாறுல் பிர் நிறுவனத்தினூடாக 61 வறிய குடும்பங்களுக்கான குழாய்க் கிணறு, மோட்டர், தாங்கி விநியோகிக்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் கண்டி: புரவலர் புத்தக பூங்காவின் அனுசரணையுடன் கண்டி, கல்வி, கலை இலக்கிய சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் ஆதரவில் கலாபூஷணம் கவிஞர் பூபாலன் எழுதிய ‘இதயமுள்ள பாரதி’ (புரவலர் புத்தபூங்கா வெளியீடு) ,’கவிதை அரங்கேறும் நேரம்’ (கண்டி ஈஸ்வரன் வெளியீடு), ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா 14ம் திகதி ஞயிற்றுக்கிழமை 2.30 மணிக்கு கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெறும்.
-
உலக தராதர அங்கீகார தின நிகழ்வு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: இலங்கை தராதர அங்கீகார சபை ஏழாவது வருடமாக “தராதர அங்கீகாரம், சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான வழங்குகைக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளில் 2015 ஆம் ஆண்டுக்கான உலக தராதர அங்கீகார தினத்தினை கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கை தராதர அங்கீகார சபை சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட் நிகழ்வில் கலந்தக்கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
-
முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் சவாலாகவே இருந்து வருகின்றது – ஷிப்லி பாறூக்.
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை பிரதான வீதியில் கடந்த 1990ம் ஆண்டுக்கு முன்பு குடியிருந்தவர்களின் காணிகளில் மீளக்குடியமர்வது என்பது ஓர் பாரிய சவாலாகவே இருந்து வருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
-
வடக்கு முஸ்லிம்களுக்கான கையெழுத்து வேட்டை: நாளை வெள்ளிக்கிழமை நாடுபூராகவும் முன்னெடுப்பு
ஏ.எச்.எம்.பூமுதீன் கொழும்பு: வடமாகாணத்திலிருந்து வெளியேற்றபட்ட முஸ்லிம்;களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி 02 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் பாரிய பணி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து நாடுபூராகவும் இடம்பெறவுள்ளது.
-
இஸ்லாமிய வங்கிகளைத் தடை செய்யவேண்டும்- பொதுபல சேனா
கொழும்பு: இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
ஜெரூசலத்தை இஸ்ரேலாக ஏற்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
நியுயோர்க்: சர்ச்சைக்குரிய ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்க பிரஜைகளின் பிறந்த இடமாக இஸ்ரேலை ஏற்கும் 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடவுச்சீட்டு சட்டம் ஒன்றை அமெரிக்க உச்ச நீதி மன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது. அமெரிக்க கொங்கிரஸ் அவையால் இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டபோதும் அது சர்வதேச கொள்கை தொடர்பில் தீர்மானிக்கும் ஜனாதிபதியின் உரிமையை மீறுவதாக நீதிமன்றத்தின் தீர்ப் பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
ஐ.தே.க பெரும்பான்மை பலத்தை பெற்றாலும் தேசிய அரசே அமையும்
கொழும்பு: பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளபோதும் தேசிய அரசாங்கம் அமைப்பதே கட்சியின் நோக்கமென ஐ.தே.க. உறுப்பினரான கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
-
இலங்கையிலுள்ள போதனா வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவுக்கான நேரம் காலை முதல் இரவு வரை அதிகரிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கமைய வெளி நோயாளர்களின் நன்மை கருதி இலங்கையிலுள்ள போதனா வைத்திய சாலைகளில் வெளி நோயாளர் பிரிவுக்கான நேரம் காலை முதல் இரவு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.