காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு எக்ஸ்ரே படங்கள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் பேக்குகள் மட்டக்களப்பில் இயங்கிவரும் பிரபல நவநாகரீக ஆடையகமான சத்தார் டெக்ஸ்டைல்ஸினால் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இவ் அன்பளிப்பு நிகழ்வு இன்று 11 ம் திகிதி காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
சத்தார் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் MSM. பாயிஸ் அவர்களால் மேற்படி பொருட்கள் வைத்தியசாலையின் களஞ்சியப் பொறுப்பதிகாரி திருமதி SRM. கமர்தீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர் மற்றும் வைத்தியசாலை உத்தியோத்தர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த வைத்திய அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர் அவர்கள் எமது வைத்தியசாலைக்கு அன்பளிப்புக்களையும் பல்வேறுபட்ட உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருவதில் மட்டக்களப்பு சத்தார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமும் ஒன்றாகும்.
இந்த வகையில் தான் கடந்த 04 வருட காலமாக எமது வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக எக்ஸ்ரே படங்கள் விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன் பேக்குகள் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் தொடர்ச்சியாக வைத்தியசாலைக்கு உதவிகளைப் புரிய அவர்களின் தொழில்கள் சிறப்பாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எமது வைத்தியசாலையில் நோயாளர்களுக்காக சிறப்பாக சேவைகள் அதிகரிக்கப்பட்டு வரும் இவ் வேளையில் பல்வேறுபட்ட தனவந்தர்களும் வைத்தியசாலைக்கு தனது பங்களிப்புக்களை செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் வைத்திய அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர் அவர்கள் தெரிவித்தார்.
Published by



Leave a comment