Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வசந்தம் தொலைக்காட்சியின் “அதிர்வு” அரசியல் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்று

    – ஹாசிப் யாஸீன் திகாமடுல்ல: வசந்தம் தொலைக்காட்சியின் “அதிர்வு” அரசியல் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (04) இரவு 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகிய மூவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்ச்சியினை பிரபல அறிவிப்பாளரும், வசந்தம் செய்திப் பிரிவின் முகாமையாளருமான…

  • முன்னாள் எம்.பிக்களின் உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்க பணிப்பு

    கொழும்பு: முன்னாள் எம்.பிக்கள் பலர் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்காது தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகவும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

  • நிறைவடைந்த இலங்கை-பாகிஸ்தான் இருபது 20 தொடரின் வரலாற்றுப் பதிவுகள்!

    கொழும்பு: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை யில் ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது இருபது-20 போட்டியிலும் ஒரு விக்கெட்டால் வென்ற பாக். அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் முக்கிய அம்சங்கள் சில,

  • ஆபாச இணையதளங்களை முடக்க இந்திய அரசு நடவடிக்கை

    டெல்லி: வயது வரம்பு இல்லாமல், யார் வேண்டுமானாலும் பார்க்க கூடிய வகையில் இயங்கி வரும் 857 ஆபாச இணையதளங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. அந்த இணைய தளங்களுக்குள் குழந்தைகள் எளிதாக நுழைந்து பார்ப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

  • “மாகாணத்தின் முதல் அமைச்சரை எமது கட்சி ஏறாவூரில் உருவாக்கும்” : ஏறாவூரில் ஹிஸ்புல்லா

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: நேற்றைய முன்தினம் ஏறாவூர் ஆற்றாங்கரை ஜூம்ஆ பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர்கள் மத்தியில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும்,பிரதி அமைச்சரும்,தற்போதைய வேட்பாளருமான எம். எல். எ. எம். ஹிஸ்புல்லா அவர்கள் உரையாற்றும்போது ,

  • முஹ்ஸின் மௌலான சதுக்கத்தில் இடம்பெற்ற NFGGயின் மற்றுமொரு பிரமாண்ட பிரச்சாரக் கூட்டம்

    – NFGG காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எற்பாடு செய்திருந்த எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மாபெரும் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நேற்று காத்தான்குடி முஹ்ஸின் மெளலானா சதுக்கத்தில் இடம்பெற்றது.

  • மு.கா. கோட்டையாக வர்ணிக்கப்பட்ட மூதூர் இன்று றிசாத் பதியுதீனை ஆதரிக்க முன்வந்திருக்கிறது

    மூதுார்: இலங்கை அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டு வந்த மூதுார் தொகுதி இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவைராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் கைமாறி போகின்ற நிலையினை காணமுடிந்தது.நேற்று மூதுாரில் எற்பாடு செய்யப்பட்டிருந்த ஜக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்.

  • இரண்டாம் வார வாக்களிப்பு அதிசயம்

  • காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்ற 25 வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள்

    – நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதிலும் ஹுஸைனியா மஸ்ஜிதிலும் கடந்த 03.08.1990 ம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையின் ஞாபகார்த்தமாக இடம்பெற்று வரும் ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள் வழமை போன்று இம்முறையும் காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

  • ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் அரசியல் இலாபத்திற்காகப் பொய் சொல்லக்கூடாது – புவி. றஹ்மதுழ்ழாஹ் காட்டம்! கண்டனம்!!

    காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் அரசியல் இலாபத்திற்காகப் பொய் சொல்லக்கூடாது. ஒரு தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் காற்றடிக்கும் திசைக்கெல்லாம் திரும்புகின்ற துரும்புபோல பலவீனமாக இருந்து செயற்படக்கூடாது. அவர் தனது நாக்கையும், வாக்கையும் காப்பாற்றி ஓர்மை உறுதியுடன் செயற்பட வேண்டும் என ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

  • தாஜுதீனின் உடலை மீள்பரிசோதிக்க நீதிமன்ற அனுமதி கோருகிறது சிஐடி

    கொழும்பு: சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமான ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பரிசோதிக்க சி.ஐ.டியினர் நீதிமன்ற அனுமதி கோரியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • “குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார்”:ஹிஸ்புல்லாஹ் அறிவிப்பு

    – எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் எதிர்வரும் பாராளுமன்றத் பொதுத் தேர்தலில் இருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தும் விலகத் தயாராகவுள்ளதாக இன்று (03) கயா பேக் ஹவுஸில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

←Previous Page
1 … 365 366 367 368 369 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar