கொழும்பு: சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமான ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பரிசோதிக்க சி.ஐ.டியினர் நீதிமன்ற அனுமதி கோரியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சி.ஐ.டியினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தாஜுதீனின் மரணம் ஒரு விபத்து அல்ல எனவும் அது திட்டமிடப்பட்ட கொலை எனவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி குறித்த மரணத்தின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளை எதிர்வரும் செட்டெம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையிலேயே சிஐடி’யினர் தாஜுதீனின் உடலை மீள்பரிசோதிக்க நீதிமன்ற அனுமதியை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment