நிறைவடைந்த இலங்கை-பாகிஸ்தான் இருபது 20 தொடரின் வரலாற்றுப் பதிவுகள்!

pakistanகொழும்பு: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை யில் ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது இருபது-20 போட்டியிலும் ஒரு விக்கெட்டால் வென்ற பாக். அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் முக்கிய அம்சங்கள் சில,

* இருபது-20 போட்டிகளில் இதுவரை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மூன்று ஆட்டங்கள் பதிவாகியுள்ளன. பாகிஸ்தான் இவ்வாறு வெல்வது இது முதல் முறையாகும். இதற்கு முன்னர் இங்கி லாந்து, நெதர்லாந்து ஒரு விக்கெட்டால் வென்றுள்ளன.

* இலங்கை சுற்றுப்பணயம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட்கள், மூன்று ஒருநாள் மற்றும் இரு இருபது-20 போட்டிகள் என்று 7 ஆட்டங்களில் வெற்றியீட்டியது. இதுவே இலங்கைக்கான இரு தரப்பு சுற்றுப்பணத்தில் பாகிஸ்தானின் சிறந்த பெறுபேறாகும். 1994 ஆம் ஆண்டு பாக். அணி இரு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் வென்றதே சிறந்ததாக இருந்தது.

* பாகிஸ்தான் அணி 174 ஓட்டங்களை துரத்தி வெற்றி பெற்றது அந்த அணி பதிலெடுத்து ஆடி பெற்ற மூன்றாவது சிறந்த வெற்றியாகும். இதில் 2012 இல் பல்லேகலயில் பங்களாதேஸூக்கு எதிராக 178 ஓட்டங்களை எட்டி வென்றது முதலிடத்தில் இருப்பதோடு இந்த ஆண்டில் லாஹூரில் சிம்பாப்வேக்கு எதிராக 176 ஓட்டங்களை துரத்தி வென்றது இரண்டாவது இடத்தில் உள்ளது.

pakistan

* பாக். அணியின் வெற்றிக்கு காரணமான அன்வர் அலி பெற்ற 46 ஓட்டங்களும் இருபது-20 போட்டியில் 9 ஆவது வரிசை வீரர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். முன்னர் இலங்கைக்கு எதிராக 10ஆவது விக்கெட்டுக்கு வந்த சொஹைல் தன்வீர் பெற்ற 41 ஓட்டங்களுமே அதிகமாக இருந்தது.

* 22 பந்துகளில் 45 ஓட்டங்கள் பெற்ற அணித்தலைவர் ஷஹிட் அப்ரிடி நான்கு சிக்ஸர்களை விளாசினார். இருபது-20 போட்டிகளில் அப்ரிடி மூன்றுக்கு மேல் சிக்ஸர் அடிப்பது இது முதல் முறை என்பதோடு, அவர் 15க்கும் அதிகமான பந்துகளுக்கு முகம் கொடுப்பதும் இது முதல்முறையாகும்.

* கன்னி இருபது-20 போட்டியில் களமிறங்கிய  ஜஹான் ஜயசூரிய பெற்ற 40 ஓட்டங்களும் இலங்கைக்காக கன்னிப் போட்டியில் பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாகும். 2007இல் ஜஹான் முபாரக் கன்னி இருபது-20இல் 13 பந்துகளுக்கு 46 ஓட்டங்கள் பெற்றது முதலிடத்தில் இருப்பதோடு 2006இல் சனத் ஜயசூரிய பெற்ற 41 ஓட்டங்களும் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.

* 48 ஓட்டங்களை விளாசிய சாமர கப்புகெதரவின் ஓட்ட வேகம் 192 ஆகும். அதாவது குறைந்தது 20 பந்துகள் முகம்கொடுத்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை வீரரின் இரண் டாவது சிறந்த ஓட்ட வேகம் இது வாகும். 2013 இல் 21 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்று 209.52 ஓட்ட வேகத்தை பதிவு செய்த குமார் சங்கக்கார இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

* கப்புகெதரவின் 48 ஓட்டங்களுமே அவர் இருபது-20இல் பெற்ற அதி கூடிய ஓட்டங்களாகும். இதற்கு முன்னர் 2009 இல் இந்தியாவுக்கு எதிராக 47 ஓட்டங்களை பெற்றதே அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது. பாகிஸ்தானுடனான முதலாவது இருபது-20 போட்டியில் அவர் 16 பந்துகளில் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

Published by

Leave a comment