Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சவுதியில் பள்ளிவாயல் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்: 15 பேர் பலி

    அBபா: சவூதி அரேபியாவில் பள்ளிவாயல் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எமனின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியான அபாவில் பாதுகாப்புப் படையினர் வழிபட்டுவந்த பள்ளிவாயலிலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

  • தேர்தல் விதிமுறை மீறும் செயல்கள் தொடர்ந்தால் நீதியான ஒரு தேர்தலை எதிர்பார்க்க முடியாது: NFGG பத்திரிகையாளர் சந்திப்பில்பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் (ஒலிப்பதிவு)

    NFGG காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று இரவு அதன் காரியாலயத்தில் இடம்பெற்றது. தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), தலைமைத்துவ சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • “தனிநபர்களின் அரசியல் அந்தஸ்தினை உயர்துவதற்காக முஸ்லிம்களின் பேரியக்கமான கட்சியினை அழிப்பதற்கு மக்கள் தயாரில்லை”: ஹரீஸ்

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: கட்சியை விட்டு பிரிந்து சென்ற ஜெமீல், சிராஸ் போன்றோர் தங்களது தவறுகளை உணர்ந்து முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைவதற்காவது கட்சி இருக்கவேண்டும். கட்சியினை பெண்கள் தான் பாதுகாக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

  • பத்ரிய்யாவுக்குள் சலசலப்பு..?

    காத்தான்குடி: எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற இருக்கின்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காத்தான்குடியில் (மட்டு மாவட்டத்தில்) போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடன், காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் மார்க்க விடய ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் செய்திருந்தது. அதுமாத்திரமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் நிபந்தனைகளுடனான கடிதத்தினை வழங்கி இருந்தது.

  • வாழைச்சேனையில் அமீர் அலியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தினை குழப்ப சதி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

    எம்.ரீ.எம்.பாரிஸ் வாழைச்சேனை: நேற்று 05.08.2015புதன்கிழமை வாழைச்சேனை கோழிக்கடை வீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளரும் சமுர்த்தி வீடமைப்பு பிரதிஅமைச்சர் அமீர்அலியை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்று இடம் பெற்றது.

  • சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சி மாநாடு எதிர்வரும் 07ம் திகதி வாழைச்சேனையில்

    – எம்.எச்.எம். அன்வர் ஏறாவூர்: சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சி மாநாடு எதிர்வரும் 07ம்திகதி வெள்ளிக்கிழமை 3.00 மணிக்கு வாழைச்சேனை வீ சீ பொதுமைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் ஸெட் ஏ நஸீர் அகமட் நேற்று ஏறாவூரில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.

  • ‘பயணப்பை’ சந்தேகநபர் மன்னாரில் கைது!

    கொழும்பு: கொழும்பு பஸ்டியன் வீதியில் பயணப்பையினுள் பெண்ணொருவரின் சடலத்துடன் விட்டுச் சென்ற சந்தேகநபர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரவினரால் நேற்று (05) கைதுசெய்யப்பட்டுள்ளார். சிசிரிவி காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் மன்னார், கோவில்குளத்தில் கைதுசெய்யப்பட்டதாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

  • “ரீ யூனியன் தீவில் கிடைத்த பாகம், எம்எச் 370 விமானத்தினுடையது”

    பரிஸ்: ரீ யூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் இறக்கையின் பாகம், காணாமல் போன எம்எச் 370 விமானத்தினுடையது என மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பாகங்களை ஃப்ரான்ஸில் ஆராய்ந்த சர்வதேச ஆய்வாளர்கள், அவை எம்எச் 370யினுடையது என “முடிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக” நஜீப் ரஸாக் தெரிவித்தார்.

  • அபாண்டக் குற்றச்சாட்டுக்கான அபராதத் தொகையைச் செலுத்த முற்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி!

    காத்தான்குடி: கடந்த மாதம் 23ம் திகதியன்று கல்லடிப் பாலத்தடியில் வைத்து காத்தான்குடிப் போக்குவரத்துப் பொலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நான், தவறான முறையில் பயணித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், எனது சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களால் வழங்கப்பட்ட பதில் சாரதி அத்தாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நீதிமன்றத் திகதிக்கமைவாக நேற்று 05ம் திகதி காலை 09:00 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்குச் சமூகமளித்தேன்.

  • “அபிவிருத்தியின் பாதையில் எனது பயணம்”: தோப்பூரில் இம்ரான் மகரூப்

    ராசி தோப்பூர்: இம்மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வில் மலர்ச்சியும் அபிவிருத்தியும் உண்டாக வேண்டும் அதில் முன்னேற்றம் காண்பதே ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி என தோப்பூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

  • “ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது தவறு”: மஹிந்த ராஜபக்ஷ

    கொழும்பு: இலங்கையில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது தவறான முடிவு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்..அதைத் தவிர தன் ஆட்சிகாலத்தில் தான் எடுத்த எந்த முடிவு குறித்தும் தனக்கு வருத்தமில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  • கடும்போக்குவாத யூதத் தலைவரின் தடுப்புக்காவல் நீடிப்பு

    எம்.ஐ.அப்துல் நஸார் நஸாரத்: பலஸ்தீன குழந்தையொன்றை எரித்துக் கொன்றதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கடும்போக்குவாத யூதத் தலைவரின் தடுப்புக் காவலை செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய நீதிமன்றமொன்று நீடித்துள்ளது.

←Previous Page
1 … 363 364 365 366 367 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar