வசந்தம் தொலைக்காட்சியின் “அதிர்வு” அரசியல் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்று

Hareesஹாசிப் யாஸீன்

திகாமடுல்ல: வசந்தம் தொலைக்காட்சியின் “அதிர்வு” அரசியல் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (04) இரவு 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
Harees

இந்நிகழ்ச்சியில் திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகிய மூவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்ச்சியினை பிரபல அறிவிப்பாளரும், வசந்தம் செய்திப் பிரிவின் முகாமையாளருமான எம்.இர்பான் தொகுத்து வழங்கவுள்ளார்.

தற்போது அம்பாறை மாவட்ட தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இந்நிகழ்ச்சி மிக சுவரஸ்யமானதாக அமையலாம்; என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்ச்சியின் போது நேயர்கள் தங்களது கேள்விகளை தொலைபேசியின் மூலம் தாங்கள் விரும்பும் வேட்பாளளரிடம் கேட்டுக்கொள்ள முடியும்.

Published by

Leave a comment