“மாகாணத்தின் முதல் அமைச்சரை எமது கட்சி ஏறாவூரில் உருவாக்கும்” : ஏறாவூரில் ஹிஸ்புல்லா

hizbullah– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: நேற்றைய முன்தினம் ஏறாவூர் ஆற்றாங்கரை ஜூம்ஆ பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர்கள் மத்தியில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும்,பிரதி அமைச்சரும்,தற்போதைய வேட்பாளருமான
எம். எல். எ. எம். ஹிஸ்புல்லா அவர்கள் உரையாற்றும்போது ,

18 ம் திகதி எமது இயக்கம் பாரியதெரு கட்சியாக பரிணமிக்கும் என்றும்,அதனை தொடர்ந்து எவ்வாறு கடந்த காலங்களில்

எம். எஸ். சுபைர் அவர்களை மாகாண சபை உறுப்பினராக மாற்றி மாகாண அமைச்சை வழங்கியதனைப் போல் இனி வரும் காலங்களில் காத்தான்குடி மக்களின் அதிகமான வாக்கை பெற்றுக்கொடுப்பதுடன் இன்ஷா அல்லாஹ் மாகாண முதல் அமைச்சராக ஆக்கி தருவன் என்றும் தெரிவித்தார்.

hizbullah

சென்ற காலங்களில் கௌரவ சுபைர் அவர்களின் மாகாணசபை உறுப்பினர் வெற்றிக்கு எனது காத்தான்குடி மண் கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது என்று சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பாராளுமன்ற தேர்தல்தான் இந்த நாட்டில் இறுதியாக நடைபெறும் விகிதாசார தேர்தலாக அமையப்போகிறது. அதன் பின் தொகுதி ரீதியானதாகவே நடைபெறும் சாத்தியம் காணப்படுகிறது.

eravur2015

அதற்கான முன் நகர்வுகளை இன்றிலிருந்து ஆரம்பித்து , முன்னால் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அஹ்மத் பரீட் மீராலெப்பை அவர்கள் எவ்வாறு காத்தான்குடி மற்றும் ஏறாவூரை ஒற்றுமைப் படுத்தி வெற்றியிட்டினார்களோ அதனை பின்பற்றியே நானும் பல முன்னெடுப்புகளை ஆரம்பிக்க இருக்கிறேன் என்றார்.

இனி எமக்கு ஊர் வாதம் வேண்டாம் 18ம் திகதிக்கு பின் ஏறாவூரில் இருந்து காத்தான்குடிக்கான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லப்படும்.

ஏறாவுரின் இரு பள்ளிவாசல்களுக்கு சொந்தமான காணியில் அந் நிருவாகத்தின் அனுசரணையுடன் பொதுச் சந்தைக்கான நான்கு மாடியைக் கொண்ட கட்டிடத் தொகுதியை அமைப்பதுடன் ,பாரிய கலாச்சார மண்டபம் ,மற்றும் வீட்டுத்திட்டங்களையும் உடன் ஆரம்பிக்க எண்ணியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
இப் பிரச்சாரக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களான
எம். எஸ். சுபைர் , ஜவாகிர் ஸாலி ஆகியோரும் மற்றும் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Published by

Leave a comment