காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்ற 25 வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள்

Suhadaநமது நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதிலும் ஹுஸைனியா மஸ்ஜிதிலும் கடந்த 03.08.1990 ம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையின் ஞாபகார்த்தமாக இடம்பெற்று வரும் ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள் வழமை போன்று இம்முறையும் காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

25வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள் இன்று 03.08.2015 திங்கள்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ்  MIM. சுபைர் JP தலைமையில் ஆரம்பமானது.

Suhada

பி.ப 04.00 மணி தொடக்கம் 04.45 மணிவரை கத்தமுல் குர்ஆன் வைபவம் இடம்பெற்றது. ஆதனைத் தொடாந்து மெத்தைப் பள்ளிவாயல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் MB. ஸியான் பாஸில் (முப்தி) அவர்களால் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தியதுடன் மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் மௌலவி அல்ஹாபிழ் MS. அப்துல் காதர் (பலாஹி) அவர்களால் துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வுகளில் உலமாக்கள், கல்விமான்கள், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் முன்னால் பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் மற்றும் அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

image

நன்றியுரையினை பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் ஜனாப் AT.அனீஸ் அஹமட் JP அவர்கள் நிகழ்த்தினார்.

Published by

Leave a comment