Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அரசியல் செய்ய முடியாதவர்கள் வழிவிட்டு, எப்படி அரசியல் செய்கிறேன் என்று பாருங்கள் – இம்ரான் மகரூப்

    ராசி கிண்ணியா: அரசியல் செய்ய முடியாதவர்கள் இளந்தலைமுறையினருக்கு வழிவிட்ட நாங்கள் இனிவரும் காலங்களில் செய்யப்போகும் அரசியலை ஒதுங்கியிருந்து பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல் செய்ய முடியாதவர்கள் வழிவிட்டு ஒதுங்கியிருந்து நான் எப்படி அரசியல் செய்கிறேன் என்று பாருங்கள என கிண்ணியா கச்சக்கொடுத்தீவு பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

  • த.தே.கூ. தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை இன்று சந்திக்கின்றனர்

    கிழக்கு ஊடக சங்கம் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கனம்மிகு. இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையிலான த.தே. கூட்டமைப்பின் தலைவர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களும் இன்று (08.08.2015) சனிக்கிழமை பிற்பகல் 02:30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களையும் சந்தித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

  • “வஸீம் தாஜூதீன் எனது குடும்பத்துடன் நெருக்கமான ஒருவர்”: நாமல்

    கொழும்பு: கொலை செய்­யப்­பட்­ட­தாக நம்­பப்­படும் பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணத்துக்கும் எமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வஸீம் என்பவர் எனது குடும்பத்துடன் நெருக்கமான ஒருவர். எங்களுடைய பாடசாலை காலத்தில் இருந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் நாங்கள் அவருடைய வீட்டுக்குச் சென்று அவரின் அம்மா மற்றும் சகோதர்களுடன் ஒன்றாக உணவு உண்டு ஒன்றாக இருந்துள்ளோம்.

  • ஹிருணிகா உள்ளிட்ட 4 ஐ.ம.சு.மு உறுப்பினர்களின் அங்கத்துவம் இரத்து

    கொழும்பு: பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க, நிரோச அத்துகோரள ஆகியோரின் ஐ.ம.சு.மு. உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது குறித்த கடிதத்தை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. வரவேற்றார்!

    நாளை மாலை மட்டக்களப்பில் சட்டத்தரணி பே. பிறேம்நாத் தலைமையில் பிரச்சாரக்கூட்டம்!! மட்டக்களப்பு: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கனம்மிகு, இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையிலான கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பை வந்தடைந்தனர். இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு தங்குவிடுதிக்கு கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் தலைமையில் சென்ற ஊடகக் குழுமத்தினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கைள வரவேற்றதுடன், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுடனான செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கும்…

  • புவியை வீடு தேடிச் சென்று சந்தித்தார் ஹிஸ்புழ்ழாஹ்! சந்திப்பின் முழு விவரம்

    காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.ம.சு. முன்னணியின் தலைமை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரான புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வை கடந்த 04.08.2015 செவ்வாய்க்கிழமை இரவு அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்தார்.

  • ஜப்பானில் இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட அணுகுண்டுத் தாக்குல்

    ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது பேரழிவை ஏற்படுத்திய அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளநிலையில் ஜப்பானிய வைத்தியசாலைகளில் உயிர்பிழைத்த ஆயிரக்கணக்கானவர்கள் இன்றும் சிகிச்சைபெற்றே வருகின்றனர்.

  • பச்சை குவிவுமாடம் கழுவப்பட்டது

    மதீனா: முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத்தலமான மதீனா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசலின் வரலாற்று முக்கியம் வாய்ந்த பச்சை நிற குவிவுமாடம் கழுவப்பட்டது. ஹஜ் காலத்திற்கான ஏற்பாடாக புனித பள்ளிவாசல் கழுவப்படும் ஓர் அங்கமாகவே குவிவுமாடம் கழுவப்பட்டுள்ளது. மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலின் தென்கிழக்கு முனையில் இருக்கும்

  • தேர்தல் பிரசார பதாதைகள் யாவும் 15ஆம் திகதி அகற்றப்படவேண்டும்

    கொழும்பு: பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதால் சகல கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரசாரப் பலகைகள் யாவும் 15ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

  • நாடு பிளவுபடப் போவதாக மஹிந்த மட்டுமே பொய்ப் பிரசாரம்

    கொழும்பு: புலம்பெயர் அமைப்புகள், போராளி கட்சிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பன ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என நிலைப்பாட்டிற்கு வந்துள்ள போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே நாடு பிளவுபடப் போவதாக பொய் பீதியை பரப்பி வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

  • வரலாற்றில் பதிவாகிய அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் ஆட்டம்!

    ட்ரெண்ட் பிரிட்ஜ்: கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் முதலில் ஆடிய அணிகளில், முதல் இன்னிங்ஸில் மிகக் குறைவான நேரத்தில் ஆட்டமிழந்த அணி எனும் பெயரை அவுஸ்திரேலிய அணி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும், ஆஷஸ் தொடருக்கான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 60 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

  • “தோற்கப் போகும் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களித்து நீங்கள் எதனைச் சாதிக்கப் போகிறீர்கள்?”: றிசாத்

    வெலி ஓயா: வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வெளி ஓயா (மணல் ஆறு) கிராமத்திற்கு நேற்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தேர்தல் பரப்புரை நிமித்தம் விஜயம் செய்திருந்தார். வெலி ஓயா ஜனக புர,சம்பத் நுவர,கல்யாணி புர,மாயாவ,எகட்டுவெவ,எதாவெடுனுவெவ, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடலை நடத்தினார்.

←Previous Page
1 … 362 363 364 365 366 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar