- NFGG
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று இரவு அதன் காரியாலயத்தில் இடம்பெற்றது. தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), தலைமைத்துவ சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
“தேர்தல் சட்ட மீறல்கள் அப்பட்டமாக மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களை அறிந்து ஆதாரபூர்வமாக தேர்தல் தினைக்களை அதிகாரிகளுக்கும் ஏனையவர்களுக்கும் அறிவித்தோம். தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகருக்கு உத்திரவிட்டிருக்கிறார்கள்.
ஆனால் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அசமந்தமாக நடந்து கொள்வதை நாம் காண்கிறோம். குறிப்பாக காத்தான்குடி பொலிஸார் மிகவும் பாராபட்சமாக நடந்துகொள்வதனை நாங்கள் கண்டிக்கிறோம். அத்துடன் பொலிஸாரின் இந்த நிலைமை தொடர்ந்தால் நியாயமான நீதியான ஒரு தேர்தலை எதிர்பார்க்க முடியாது எனவும் அஞ்சுகிறோம்.” என்று பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் குறிபிட்டார்.
Published by



Leave a comment