- எம்.ரீ.எம்.பாரிஸ்
வாழைச்சேனை: நேற்று 05.08.2015புதன்கிழமை வாழைச்சேனை கோழிக்கடை வீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளரும் சமுர்த்தி வீடமைப்பு பிரதிஅமைச்சர் அமீர்அலியை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
வரலாறு கானாத அளவில் மக்கள் திரள் அங்கு காணப்பட்டது. ஊருக்கு எம்.பீ வேண்டும் என்ற ஆத்மிக உணர்வுகளுடன் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பிரதியமைச்சர் அமீர்அலியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டிருத்தனர்.
இக்கூட்டத்தை குழப்பும் நோக்கில் அமைச்சரின் வாகனத்தை இலக்கு வைத்து வீசப்பட்ட கல் ஒன்று பார்வையாளராக நின்ற கொண்டிருந்த நாவலடி பரிட் என்பவரின் தலையில் விழுந்து பாரிய காயத்தை உண்டுபன்னியது பாதிக்கப்பட்ட குறிந்த நபா் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவத்தை அறிந்த அமைச்சர் உடனடியாக வைத்தியசாலை சென்றதோடு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வாழைச்சேனை பொலிசாரை கேட்டு கொண்டார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment