சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சி மாநாடு எதிர்வரும் 07ம் திகதி வாழைச்சேனையில்

nazeer mubeen slmc– எம்.எச்.எம். அன்வர்

ஏறாவூர்: சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சி மாநாடு எதிர்வரும் 07ம்திகதி வெள்ளிக்கிழமை 3.00 மணிக்கு வாழைச்சேனை வீ சீ பொதுமைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் ஸெட் ஏ நஸீர் அகமட் நேற்று ஏறாவூரில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் பல முக்கிய பிரமுகர்களின் உரை இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளதாகவும் கல்குடா முஸ்லிம்கள் பெரும் ஆதரவு தருவார்கள் எனவும் மாவட்டத்தின் அனைத்து ஆதரவாளர்களையும் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

nazeer mubeen slmc

முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகிக்கும் உலமா காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கிளைகள் சேர்ந்து நடாத்தப்படவுள்ள இப்பிரமாண்டமான மாநாட்டுக்கு அனைவரையும் சமூகமளிக்குமாறும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது அவர் மேலும் தெரிவித்தார்.

slmc

மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டிற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு செயலாளருமான யூ எல் எம் என் முபீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியாரும் சமூகமளித்திருந்தனர்.

Published by

Leave a comment