“தனிநபர்களின் அரசியல் அந்தஸ்தினை உயர்துவதற்காக முஸ்லிம்களின் பேரியக்கமான கட்சியினை அழிப்பதற்கு மக்கள் தயாரில்லை”: ஹரீஸ்

harees haris

  • ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: கட்சியை விட்டு பிரிந்து சென்ற ஜெமீல், சிராஸ் போன்றோர் தங்களது தவறுகளை உணர்ந்து முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைவதற்காவது கட்சி இருக்கவேண்டும். கட்சியினை பெண்கள் தான் பாதுகாக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது -13ம் பிரிவு கிளையின் ஏற்பாட்டில் மகளிர் கருந்தரங்கு இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.நஸார்தீன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பொறியியலாளர் ஏ.ஹிபத்துல் கரீம் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கான அரசியல் அந்தஸ்தினை இத்தேர்தல் முடிந்த கையோடு மாகாண அமைச்சுப் பதவியினை ஜெமீலுக்கு வழங்குவதூடாக வழங்கவிருந்தார். அதற்கான சமிஞ்சையினை தலைவர் ஜெமீலுக்கு வழங்கியிருந்தார்.

இவ்வாறான நிலையில் அவரின் அவசர முடிவினால் கட்சியை விட்டு விலகி அமைச்சர் றிசாட்டின் மாயை வளைக்குல் சிக்குண்டு இன்று சாய்ந்தமருதுக்கு கிடைக்கவிருந்த அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்துள்ளார்.

தனிநபர்களின் அரசியல் அந்தஸ்தினை உயர்துவதற்காக முஸ்லிம்களின் பேரியக்கமான கட்சியினை அழிப்பதற்கு மக்கள் தயாரில்லை என்பதை எதிர்வரும் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு புரியவைப்பார்.

மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ஜெமீலுக்கு வழங்குவது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் றிசாட்டுக்கும், செயலாளர் ஹமீட்டுக்குமிடையே இரு வௌ;வேறான கருத்துக்கள் நிலவுகின்றது. இதனால் ஜெமீல் ஏமாற்றப்படலாம். அதேபோல் சிராஸூம் ஏமாற்றப்படலாம் இவ்வாறான நிலையில் இவர்கள் இருவரும் தங்களது தவறினை உணர்ந்து மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்காவது கட்சி இருக்க வேண்டும்.

அபிவிருத்தி அரசியலை காட்டி கட்சியை பிளவுபடுத்த இன்று சிலர் முற்பட்டுள்ளனர். அபிவிருத்தி அரசியலானாலும் சரி, உரிமைக்கான அரசியாலானாலும் சரி அதனை முஸ்லிம் காங்கிரஸ் சரி சமனான செய்து வந்துள்ளது.

கடந்த மஹிந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருந்தமையினால் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்கில் எடுக்கவில்லை.

இன்று இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து மைத்திரி, ரணில் தலைமையிலான ஒரு நல்லாட்சியினை ஏற்படுத்தியுள்N;ளாம். இதன் அனுகூலங்களை எமது மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பதற்காகவே நாம் இத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றோம்.

எனவே இத்தேர்தலில் எமது கட்சியின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களான எம்மூவருக்கு வாக்களிப்பதுடன் மைத்திரி, ரணில் அரசாங்கத்தினையும் பலப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Published by

Leave a comment