மதீனா: முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத்தலமான மதீனா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசலின் வரலாற்று முக்கியம் வாய்ந்த பச்சை நிற குவிவுமாடம் கழுவப்பட்டது. ஹஜ் காலத்திற்கான ஏற்பாடாக புனித பள்ளிவாசல் கழுவப்படும் ஓர் அங்கமாகவே குவிவுமாடம் கழுவப்பட்டுள்ளது. மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலின் தென்கிழக்கு முனையில் இருக்கும்
இந்த குவிவமாடத்திற்கு கீழ் பகுதியிலேயே இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) மற்றும் அவர்களது தோழர்களான அபூபக்கர் (றழி) மற்றும் உமர் (றழி) ஆகியோரது அடக்கஸ்தலங்கள் அமைந்துள்ளன.
இந்த குவிவுமாடம் மம்லூக்குகளின் காலத்தில் கி.பி. 1279 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். 1818இல் உஸ்மானிய ஆட்சியாளர் சுல்தான் இரண்டாவது முஹமது தற்போதைய குவிவுமாடத்தை புனர்நிர்மாணம் செய்தார்.
இந்த குவிவுமாடத்திற்கு கி.பி. 1837 ஆம் ஆண்டிலேயே பச்சை நிறம் பூசப்பட்டது. அன்று தொடக்கம் அது பச்சை குவிவுமாடம் என்று பிரபலம் பெற்றது.
Published by


Leave a comment