ஹிருணிகா உள்ளிட்ட 4 ஐ.ம.சு.மு உறுப்பினர்களின் அங்கத்துவம் இரத்து

hiruகொழும்பு: பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க, நிரோச அத்துகோரள ஆகியோரின் ஐ.ம.சு.மு. உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது குறித்த கடிதத்தை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் தாங்கள் அங்கத்துவம் வகிக்கும் கட்சியில் போட்டியிடாது வேறு கட்சியில் அல்லது சுயாதீனக் கட்சிகளில் போட்டியிடுகின்றமையே இதற்கான காரணம் என குறிப்பிடப்படுகின்றது. மேலும் இது குறித்த கடிதம் அவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Published by

Leave a comment