-
ராசி
கிண்ணியா: அரசியல் செய்ய முடியாதவர்கள் இளந்தலைமுறையினருக்கு வழிவிட்ட நாங்கள் இனிவரும் காலங்களில் செய்யப்போகும் அரசியலை ஒதுங்கியிருந்து பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல் செய்ய முடியாதவர்கள் வழிவிட்டு ஒதுங்கியிருந்து நான் எப்படி அரசியல் செய்கிறேன் என்று பாருங்கள என கிண்ணியா கச்சக்கொடுத்தீவு பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கும் போது நாட்டில் சிறப்பு மிக்க மாவட்டங்களில் திருகோணமலை மாவட்டமும் ஒன்றாக இருப்பது எமக்கு பெருமையளிப்பதாக உள்ளது. அதனால் தான் இம்மாவட்டத்தில் புதியதோர் அரசியல் கலாசாரத்தினை உருவாக்க வேண்டுமென்பதே எனது இந்த தேர்தல் நுழைவுக்கான நோக்கமாகும். அவ்வாரான தேவைப்பாடினை இப்போது மக்கள் உணர்ந்தவர்களாகவே உள்ளனர்.
பொதுவாக சொல்லப்போனால் காணிப்பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக் கொண்டால் புல்மோட்டை, செல்வநகர், கரிமலையூற்று, குச்சவெளி இன்னும் பல பிரதேசங்கள் உள்ளது. இது தொடர்பாக நான் மாகாணசபை உறுப்பினராக இருந்த போது பல்வேறு மட்டங்களில் குரல் கொடுத்து அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன்.
அவற்றையெல்லாம் தீர்த்து வைக்கும் நடவடிக்கையை எடுத்து மக்களின் நிம்மதிக்கு வழிவகுப்பதே முக்கியமாகவுள்ளது. இது தொடர்பாக செல்பிக்கு மட்டும் போஸ் கொடுத்தவர்கள் இன்று வாக்குக்கேட்டு அரசியலுக்கு மீண்டும் மீண்டும் வர ஆசைப்படுவது வருத்தமளிக்கின்றது. இவற்றை நீங்கள் தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.
மீள்குடியேற்றம், சகாதாரம், கல்வி இதற்கு எனது தந்தை முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தி செய்ததுபோல் என் தந்ததையின் வழியில் தொடர்ந்தும் நான் முன்னெடுக்க என் மதிப்புக்கும் மேலான மக்களின் அன்பும் அவர்களின் அதிகப்படியான விருப்பு வாக்குகளும் என்னை பாராளுமன்றம் அனுப்பிவைக்கும்.
இந்த வாய்ப்பினை தந்துதவுமாறு பணிவாய் வேண்டிக்கொள்வதோடு
கடந்த கால அரசாங்கங்கள் செய்த அடாவடித்தனங்கள் நிறைந்த அரசியல் வாழ்வுக்கு முடிவு கட்டப்பட்டது போல் அந்த கறுப்பு நினைவுகளையும் மக்கள் இந்த பாராளுமன்றத் தேர்தலுடன் மறந்து போகும் நிலையினை நாம் நாம்தான் ஏற்படுத்த வேண்டும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார். இதன் போது கச்சக்கொடுத்தீவு பிரதேச மூத்த ஐக்கிய தேசிய கட்சி அரசில்வாதிகள், அரசியல் பிரமுகர்கள், புத்தஜீவிகள், ஏராளமான மூத்த அரசியல் ஆதரவாளர்கள் அணியணியாக வந்து இம்ரான் மகரூப்புடன் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.



Leave a comment