தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. வரவேற்றார்!

நாளை மாலை மட்டக்களப்பில் சட்டத்தரணி பே. பிறேம்நாத் தலைமையில் பிரச்சாரக்கூட்டம்!!

puvi sampanthanமட்டக்களப்பு: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கனம்மிகு, இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையிலான கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பை வந்தடைந்தனர். இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு தங்குவிடுதிக்கு கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் தலைமையில் சென்ற ஊடகக் குழுமத்தினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கைள வரவேற்றதுடன், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுடனான செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாளை சனிக்கிழமை பிற்பகல் 03:30 மணிக்கு மட்டக்களப்பு பஸ் நிலைய முன்றலில் சிரேஷ்ட சட்டத்தரணி பே. பிறேம்நாத் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

puvi sampanthan

இப்பிரச்சாரக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. பொன். செல்வராசா அவர்களின் தலைமையிலான வேட்பாளர்களும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் விரிவாக மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment